Published : 06 Dec 2024 06:13 AM
Last Updated : 06 Dec 2024 06:13 AM
சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொருளாதாரத்தின் அங்கமாக விளங்கும் துறைமுகங்கள் மேம்பாடு, ஏற்றுமதி, வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் இந்நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்த பங்கு வகிக்கின்றன. இந்தியத் தொழில் துறையில் 45% உற்பத்தி, 40% ஏற்றுமதியில் பங்கு வகிக்கும் இந்நிறுவனங்கள் 11 கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு வேலை வழங்குகின்றன.
கிராமப்புறங்களில்... இந்தியாவின் சிறிய, நடுத்தர அளவிலான தொழில்கள் துறையானது குடிசை, சிறிய, நடுத்தரத் தொழில்கள் என மூன்று பிரிவுகளாக வகுக்கப்பட்டுள்ளது. குறு, சிறு-நடுத்தர அளவிலான தொழில்கள் அமைச்சகத்தின் (Ministry of Micro, Small & Medium Enterprises) 2023ஆம் ஆண்டு அறிவிப்பின்படி, இந்தியாவில் சுமார் 6.3 கோடி குறு, சிறு - நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் (சிறிய தொழிற்கூடங்கள் 96%), இவற்றில் 3.5 லட்சம் சிறிய தொழில்கள், 60,000 நடுத்தரத் தொழில்கள் உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT