Published : 10 Nov 2024 07:34 AM
Last Updated : 10 Nov 2024 07:34 AM
மு.பொ. என்றழைக்கப்படும் கவிஞர் மு.பொன்னம்பலம், ‘மெய்யுள்’ என்கிற புதிய இலக்கியக் கோட்பாட்டையும் உருவத்தையும் தமிழில் உருவாக்கி அளித்த மு.தளையசிங்கத்தின் தம்பி. மு.பொவும் மு.தவைப் போல மெய்யுளைத் தொடர்ந்த எழுத்தாளர், விமர்சகராகவே இருந்தார்.
மெய்யுள் ஒரு புதிய இலக்கிய உருவமாகும். அது பூரண உருவமாகவும் இருப்பதால் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை என்கிற பாகுபாடுகளை உடைத்தும் கடந்தும் செல்லும் ஓர் உருவமாகவும் இருக்கும். செய்யுள், உரைநடை என்கிற வித்தியாசங்களையும் அது மதிப்பதில்லை. மெய்யுள் கற்பனைக் கோலங்கள் சகலவற்றையும் குலைத்துக்கொண்டு அவற்றின் தளங்களைத் தகர்த்துக்கொண்டு, நித்திய சத்தியத்தை நோக்கிய நேரடி அனுபவரீதியான ஊடுருவல்களுக்குரிய கலை, இலக்கிய உருவமாகும். இதற்கு வகைமாதிரியான படைப்புகளையும் உருவாக்கி அளித்தார் மு.த. அதைத் தொடர்ந்தார் மு.பொ.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT