Published : 07 Nov 2024 06:06 AM
Last Updated : 07 Nov 2024 06:06 AM
கனிம வளங்கள் மீதான வரியை வசூலிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கா மத்திய அரசுக்கா என்பது தொடர்பான வழக்கில், மாநில அரசுகளுக்கே அந்த அதிகாரம் என உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு பெரும் கவனம் ஈர்த்திருக்கிறது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வின் இந்த உத்தரவு, இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் மிகவும் முக்கியமானது. இந்த விவாதத்தின் நீட்சியாக, உள்ளாட்சி நிர்வாகத்தில் மாநில அரசு கவனம் செலுத்த வேண்டியதன் அவசியமும் பேசப்பட வேண்டும்.
மாநிலச் சட்டங்களின் வலிமை: அரசமைப்புச் சட்டக்கூறு 246, அட்டவணை 7, மத்திய அரசுக்கான அதிகாரங்கள் (பட்டியல் 1), மாநில அரசுக்கான அதிகாரங்கள் (பட்டியல் 2), மத்திய - மாநில அரசுகள் இரண்டுக்குமான ஒருங்கிணைந்த அதிகாரங்கள் (பட்டியல் 3) ஆகியவற்றை விளக்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT