Published : 29 Oct 2024 06:17 AM
Last Updated : 29 Oct 2024 06:17 AM

ப்ரீமியம்
விடுதலை இறையியலின் தந்தை | அஞ்சலி: குஸ்டாவோ குட்டியரஸ்

‘​விடுதலை இறையியலின் தந்தை’ எனப் போற்றப்​படும் லத்தீன் - அமெரிக்க இறையியல் / மெய்யியல் அறிஞர் குஸ்டாவோ குட்டியரஸ், அக்டோபர் 22ஆம் தேதி பெரு நாட்டின் லிமா நகரில் காலமானார். கிறித்து​வர்​களின் சமூகப் படிப்​பினைகளை வடிவமைத்​தவர்​களில் மிகவும் குறிப்​பிடத்​தக்​கவரான குட்டியரஸ், கத்தோலிக்கத் திருச்சபை சமூக நீதியை முதன்​மைப்​படுத்தி, ஏழைகள், விளிம்​புநிலை​யினர் சார்பாக நிலைப்பாடு எடுக்கப் பெரிதும் வலியுறுத்​தி​யவர். கிறித்துவ இறையியல் சிந்தனைப் போக்கு​களில் ஏறத்தாழ அரை நூற்றாண்​டாகச் செல்வாக்கு செலுத்​திவருவது விடுதலை இறையியல். பல முற்போக்கான கிறித்து​வர்களை இந்திய அளவிலும், பல மனித உரிமைப் போராளி​களைத் தமிழக அளவிலும் உருவாக்​கியது குட்டியரஸின் விடுதலை இறையியல் என்னும் கருத்​தியலே!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x