Published : 23 Oct 2024 06:21 AM
Last Updated : 23 Oct 2024 06:21 AM
சமூக நிறுவனங்கள் எவ்வாறு பொருளாதார வளர்ச்சியையும், நாடுகளின் செழுமையையும் தீர்மானிக்கின்றன என்பது பற்றிய ஆய்வுகளுக்காக டாரன் அசெமோக்லு (Daron Acemoglu), சைமன் ஜான்சன் (Simon Johnson), ஜேம்ஸ் ஏ.ராபின்சன் (James A Robinson) ஆகியோருக்கு இந்த ஆண்டுக்கான பொருளாதார நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அசெமோக்லுவும், சைமனும் அமெரிக்காவில் உள்ள மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) பேராசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். ராபின்சன் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார்.
ஏற்றத்தாழ்வின் அடிப்படைக் காரணங்கள்: உலகின் முதல் 20 சதவீதப் பணக்கார நாடுகள், தற்போது ஏழை நாடுகளைவிடச் சுமார் 30 மடங்கு பணக்கார நாடுகளாக உள்ளன. பணக்கார நாடுகளுக்கும் ஏழ்மையான நாடுகளுக்கும் இடையே வருமான இடைவெளி நீடித்துவருகிறது; ஏழ்மையான சில நாடுகள் பணக்கார நாடுகளாக மாறினாலும்கூட, முன்னேறிய நாடுகளின் நிலையை இன்னும் அவை எட்டவில்லை. பொருளாதார வளர்ச்சியில் உள்ள வேறுபாடுகளையும், வளர்ச்சி ஏற்றத்தாழ்வுகளையும் நிர்ணயிப்பது என்ன என்பது பேரியல் பொருளாதாரத்தின் (Macro Economics) மையக் கேள்விகளில் ஒன்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT