Published : 22 Oct 2024 06:27 AM
Last Updated : 22 Oct 2024 06:27 AM
மத்திய அரசின் நிதி உதவி (Junior Research Fellowships) பெறுகின்ற உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கான தகுதித் தேர்வாக மட்டுமே இருந்த யூஜிசி நெட், சிஎஸ்ஐஆர் நெட் ஆகியவை தற்போது நாடு முழுவதும் முனைவர் பட்ட ஆய்வுகளை மேற்கொள்வதற்கான அடிப்படைத் தகுதி நுழைவுத் தேர்வுகளாக அறிவிக்கப்பட்டுவிட்டன. இதன் மூலம், விளிம்பு நிலைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பிஹெச்டி என்பது எட்டாக்கனியாக ஆக்கப்பட்டுள்ளது.
முனைவர் பட்டம் என்பது பொதுவாக ஒருவர் தேர்வுசெய்த துறையின் மிக உயர்ந்த அளவிலான கல்விச் சாதனையைக் குறிக்கிறது. தன் வாழ்நாளில் ஒருவர் சிறு வயதில் எழுப்பிக்கொண்ட ஒரு கேள்வியை அல்லது ஒரு யோசனையை மனதில் தக்கவைத்துக்கொண்டு, தேடுதலில் ஈடுபட்டு நிகழ்த்துகின்ற முக்கியக் கண்டுபிடிப்புகளை அங்கீகரிக்கின்ற ஆராய்ச்சிப் பட்டமாக இது விளங்குகிறது. மகத்தான இந்த இலக்கை நோக்கிய பயணத்தின் பொது வழிகளை மத்திய அரசு தற்போது மூடியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT