Published : 22 Oct 2024 06:19 AM
Last Updated : 22 Oct 2024 06:19 AM
தமிழ்நாடு அரசின் சமூக நலன் - மகளிர் உரிமைத் துறையின் கீழ் செயல்படும் ‘கைம்பெண்கள் - ஆதரவற்ற மகளிர் நல வாரியம்’ ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் (2022-2024) நிறைவடைந்துவிட்டன. ஆனால், இந்த வாரியத்தின் மூலமாகக் கைம்பெண்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள பெண்கள் பெரிய அளவுக்கு முன்னேற்றம் அடைந்ததாகத் தெரியவில்லை.
2011ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டில் 38 லட்சத்து 58 ஆயிரம் கைம்பெண்கள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. குடிப்பழக்கம், குணப்படுத்த முடியாத நோய்கள், சாலை விபத்து, தற்கொலை போன்ற காரணங்களால் ஆண்கள் இறந்துகொண்டேதான் இருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT