Published : 21 Oct 2024 06:18 AM
Last Updated : 21 Oct 2024 06:18 AM
தொழில்நுட்ப எழுத்தாளர்: வார்ட் கிறிஸ்டின்சென் (Ward Christensen) அமைதியாக இறந்திருக்கிறார். அவரது மறைவு குறித்துக் குறும்பதிவுகளோ, குறும் காணொளிகளோ அதிகம் இல்லாமல், சமூக ஊடகத்தின் பேசுபொருளாகாமல் போனதை நம் காலத்து முரண் என்றுதான் சொல்ல வேண்டும். புகழ் வெளிச்சத்தை நாடாதவராகவே வாழ்ந்து மறைந்த, தனது கண்டுபிடிப்புக்காக ஒருபோதும் மார்தட்டிக்கொள்ளும் இயல்பைக் கொண்டிராத கிறிஸ்டின்சென் இதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார் என்பது மட்டும் அல்ல, தனது மரணம் தொடர்பான பரபரப்பின்மையை விரும்பவே செய்திருப்பார்.
அதுவே அவரது இயல்பு. தன்னைவிட, தனது கண்டுபிடிப்பு தொடர்பாகவே மற்றவர்கள் பேசுவதை கிறிஸ்டின்சென் விரும்பியிருக்கலாம். எனினும், ‘பிபிஎஸ். கண்டுபிடிப்பாளரும் நம் ஆன்லைன் யுகத்தை வடிவமைத்தவருமான கிறிஸ்டின்சென் மரணம்’ என்னும் ‘அர்ஸ் டெக்னிகா’ தொழில்நுட்பச் செய்தித் தளத்தின் இரங்கல் செய்தியின் தலைப்பே அவரைப் பற்றிக் கச்சிதமாக உணர்த்திவிடுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT