Published : 20 Oct 2024 07:51 AM
Last Updated : 20 Oct 2024 07:51 AM

ப்ரீமியம்
அணு ஆயுதப் போரின் கதிரியக்க மூடுபனி

அணு ஆயுதப் போர் நோக்கி நகர்கிறதா தற்போதைய உலக அரசியல் சூழல்? இந்தக் கேள்விக்கு விடை காண்ப​தற்கு முன்பு அணு ஆயுதப் போர் என்ன விளைவுகளை உண்டாக்கும் என்பதை நாம் புரிந்​து​கொள்ள வேண்டும். இந்தப் பூவுலகை 7 முறை முற்றி​லுமாக அழிக்கும் அளவிற்கு வல்லமை படைத்த அணு ஆயுதங்கள் தற்போது உலகளவில் உள்ளன எனச் சொல்லப்​படு​கிறது.

குறிப்பாக அமெரிக்கா, ரஷ்யா, ஃபிரான்ஸ், சீனா, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்​தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய நாடுகள் மொத்தமாக 12,121 அணு ஆயுதங்களை வைத்திருக்​கின்றன. இந்த அணு ஆயுதங்களை வைத்துள்ள இந்த நாடுகளுக்கு இடையிலான உறவு முரண்​களுடன் இருப்​ப​தால், உலக அளவில் அணு ஆயுதப் போர் மேகங்கள் சூழ்ந்​திருப்​ப​தாகச் சொல்லப்​படு​கிறது. அப்படி ஓர் அணு ஆயுத உலகப் போர் நிகழ்ந்​தால், அது அணுக் கதிரியக்க மூடுபனிக் காலத்தை (Nuclear Winter) உருவாக்​கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x