Published : 16 Oct 2024 06:18 AM
Last Updated : 16 Oct 2024 06:18 AM
“அடிப்படை அறிவியல் ஆய்வுகளுக்கும் கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும் இயந்திரக் கற்றல் (machine learning) முறைக்கு அடித்தளமான ‘செயற்கை நரம்பியல் வலையமைப்பு’ (artificial neural networks) கண்டுபிடிப்புக்காக இந்த ஆண்டின் இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட் (John J. Hopfield, 90), கனடாவின் டொரன்டோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெஃப்ரி ஹின்டன் (Geoffrey E. Hinton, 77) ஆகியோருக்கு இவ்விருது பகிர்ந்தளிக்கப்படுகிறது.
செயற்கை நரம்பியல் வலையமைப்பு: இன்றைய சூழலில், செயற்கை நுண்ணறிவு என்பது அனைவரும் அறிந்த ஒன்றாக, மாணவர்கள் விரும்பிப் படிக்கும் ஒரு துறையாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு என்று பொதுவாகச் சொல்லப்பட்டாலும், ‘செயற்கை நரம்பியல் வலையமைப்பு’ (artificial neural networks) கொண்டு அரங்கேறும் இயந்திரக் கற்றல் நடவடிக்கைதான் இதில் சுட்டப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT