Published : 13 Oct 2024 07:51 AM
Last Updated : 13 Oct 2024 07:51 AM
துரியோதனனின் காதல் மனத்தை வெளிப்படுத்தும் கதை, ‘இன்னும் ஒரு கணம்’. எழுதியவர் பாவண்ணன். வியாச பாரதத்தின் ஆதி பருவத்தில் ‘திரௌபதி மாலையிடு சருக்கம்’ என்கிற பகுதியில் இடம்பெற்றுள்ள ஒரு சிறிய தொன்மக்கதையை எடுத்துக்கொண்டு இந்தக் கதை எழுதப்பட்டுள்ளது. பாஞ்சால நாட்டு மன்னனான துருபதனின் மகள் திரௌபதி, அவர் செய்த யாகத்திலிருந்து கிடைத்தவர். திரௌபதியின் உண்மைப் பெயர் கிருஷ்ணை. மகளுக்குத் திருமணம் செய்யச் சுயம்வரத்துக்கு ஏற்பாடு செய்கிறார் துருபதன். நட்பைப் பெருக்கவும் பகையை முடிக்கவும் பாண்டவர்களுள் ஒருவருக்கே தன் மகளை மணம் முடிக்கவும் துருபதன் முடிவு செய்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT