Published : 09 Oct 2024 06:13 AM
Last Updated : 09 Oct 2024 06:13 AM
ஜம்மு - காஷ்மீரிலிருந்து பிரிக்கப்பட்டுத் தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்ட லடாக், அரசமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணையில் சேர்க்கப்பட வேண்டும் என்கிற கோரிக்கை தொடர்ந்து அங்கு ஒலித்துவருகிறது. இது தொடர்பாக மத்திய அரசிடம் மனு கொடுக்கச் சென்ற சூழலியல் செயல்பாட்டாளர் சோனம் வாங்சுக் தலைமையிலான குழுவினர், டெல்லி எல்லைப் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, லடாக் விவகாரம் தேசிய அளவில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தப் பின்னணியில், அரசமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணை குறித்துத் தெரிந்துகொள்வது அவசியம்.
அட்டவணைகளின் வரலாறு: ஆங்கிலேயர்களின் வருகைக்கு முன்பு பழங்குடி மக்கள் அனைவரும் முகலாய, சுல்தானிய மன்னர்களின் ஆளுகைக்கு முழுமையாகக் கட்டுப்பட்டவர்களாக இருக்கவில்லை. முகலாய, சுல்தானிய அரசர்கள் பழங்குடிச் சடங்குகள், வாழ்க்கை முறையில் தலையிடவில்லை. பிரிட்டிஷாரின் வருகைக்கு முன், பழங்குடி மக்கள் காடுகளுக்கும் அவர்களின் முன்னோர்வழி வந்த நிலங்களுக்கும் உரிமையுடையவர்களாக இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT