Published : 23 Sep 2024 06:10 AM
Last Updated : 23 Sep 2024 06:10 AM
என் முன்னால் அமர்ந்திருக்கிறது ஒரு மனித இயந்திரம். இன்று காலைதான் நான் அதைக் கடையில் வாங்கிவந்தேன். பொறியாளர் ஒருவர் அதை எனக்கு இப்போதுதான் கட்டுப் பிரித்து அமைத்துக்கொடுத்தார். பார்க்க அச்சு அசலான மனித உருவம். மனிதன் மகத்தான கலைஞன்தான். கடவுளையே மனித உருவில் ஆக்கியவனுக்கு, ஓர் இயந்திரத்தை மனித உருவில் ஆக்குவதா கடினம்?
இயந்திரம் இயங்கத் தொடங்கியது. இப்போது முதன்முதலில் அதனோடு உரையாடப்போகிறேன். தொழிற்சாலையில் அதற்கு வைக்கப்பட்ட பெயர் 9uu4-7473-kdue-8483. இப்போது அதற்கு நான் ஒரு பெயர்சூட்ட வேண்டும். பண்டைய தமிழ் எழுத்தாளர் சுஜாதாவின் தாக்கத்தில் பலர் தாங்கள் வாங்கிய மனித இயந்திரங்களுக்கு ‘இயந்திரா’ என்று பெயர்வைத்திருக்கிறார்கள். நானோ வேறு பெயர் சூட்ட விரும்புகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT