Published : 03 Sep 2024 03:40 PM
Last Updated : 03 Sep 2024 03:40 PM

ப்ரீமியம்
அமெரிக்க அதிபர் தேர்தல்: அசத்தும் அறிமுகப் பேச்சாளர்கள் 

அமெரிக்க அரசியல் அமைப்பில் ஓர் அரசியல் கட்சியின் தேசிய மாநாடானது, அக்கட்சிக்குள் ஆதரவு திரட்டும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுபவர், அக்கட்சிப் பிரதிநிதிகளின் பெரும்பான்மையை வென்றாக வேண்டும். ஒவ்வொரு மாநிலப் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொண்டு தாங்கள் விரும்பும் வேட்பாளரை வாக்களித்துத் தேர்வு செய்வார்கள். இதே மாநாட்டில் அதிபர் வேட்பாளராக நிறுத்தப்படுபவர், தான் விரும்பும் துணை அதிபர் வேட்பாளரை அதிகாரபூர்வமாக முன்மொழிவார். கட்சியின் கொள்கைகள், இலக்குகள் கலந்தாலோசிக்கப்பட்டு ஏற்கப்படும்.

சிகாகோ நகரத்தில் இதுவரை நடைபெற்ற 25 ‘அதிபர் சார் தேசிய மாநாடு’களில் (Democratic National Conventions), 14 குடியரசுக் கட்சித் தேசிய மாநாடுகளும், 11 ஜனநாயகக் கட்சித் தேசிய மாநாடுகளும் நடைபெற்றுள்ளன. சமீபத்தில் நிகழ்ந்த 12ஆவது ஜனநாயக மாநாடு, 26ஆவது அதிபர் சார் தேசிய மாநாடாக அறியப்படுகிறது. முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மிஷேல் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன், பேச்சாளர் எமெரிட்டா நான்சி பெலோசி, துணை அதிபர் வேட்பாளர் டிம் வேல்ஸ் போன்ற ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இம்மாநாட்டில் அனல் பறக்கப் பேசினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x