Published : 26 Aug 2024 06:15 AM
Last Updated : 26 Aug 2024 06:15 AM
கவிஞர் இசைக்கு ‘நாஞ்சில் நாடன் விருது’ அண்மையில் அறிவிக்கப்பட்டபோது, அத்தகவலை ஃபேஸ்புக்கில் அவர் பகிர்ந்திருந்தார். ‘அறிவிப்பைப் பகிர்ந்ததுபோலப் பரிசைப் பொருண்மையாய்ப் பெற்ற பிறகு பதிவிடுங்கள்’ என்று என் வாழ்த்தில் கேட்டுக்கொண்டிருந்தேன்.
கோரிக்கைக்கு அவர் ஒப்புதல் தந்து பதிவிடவில்லை. அலகிலா விளையாட்டுக் கவிஞராகக் காட்சி தந்தாலும் கள நிலவரம் தேர்ந்தவர் இசை. தோற்றப் பிழை! தேர்தல் அறிக்கைகள் நன்றாகத் தயாரிக்கப்படுகின்றன; மோசமாகச் செயல்படுத்தப்படுகின்றன என்பார்கள். நம்பிக்கையை அளித்து வாக்கு அறுவடை செய்துவிடுவர்; பின் அறிக்கையைப் பற்றி எதற்குக் கவலைப்பட வேண்டும்? இலக்கியப் பரிசை வழங்கும் புரவலர்களுக்கு உடனடிப் பயன் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT