Published : 04 Aug 2024 06:19 AM
Last Updated : 04 Aug 2024 06:19 AM
இந்திய ஜனநாயகத்தின் சிற்பிகளில் முதன்மையானவரும் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் தந்தவருமான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தன் வாழ்நாளில் பல லட்சம் பக்கங்களை எழுதியுள்ளார். ஆனால், அவர் எழுதியவற்றில் ஒரு பகுதி மட்டுமே நூல்களாகவும் இணையத்திலும் நமக்குக் கிடைக்கிறது. அவர் எழுதியவற்றில் பெரும்பகுதி முறையாகத் தொகுக்கப்படாமல் உள்ளது. இந்தக் குறையை நீக்கும் நோக்கத்துடன் ஆய்வாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கெளதம சன்னா ‘அம்பேத்கரியம் - புரட்சியாளர் அம்பேத்கரின் எழுத்துகள், பேச்சுகள், ஆவணங்கள்’ என்னும் தலைப்பில் 50 தொகுதிகளைத் தொகுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் 60ஆம் பிறந்தநாளை ஒட்டி, ‘கனவுத் திட்ட’மாகத் தொடங்கப்பட்ட இந்தப் பணியை இரண்டரை ஆண்டுகளில் முடித்திருக்கிறார். ஜெய்பீம் ஃபவுண்டேஷன் வெளியிடும் 22,630 பக்கங்கள் கொண்ட இந்த நூல் தொகுப்பு குறித்து கெளதம சன்னாவிடம் பேசியதில் இருந்து:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT