Published : 01 Aug 2024 06:23 AM
Last Updated : 01 Aug 2024 06:23 AM
இந்தியாவின் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நோக்கிய அறிவிப்புகளும், அரசின் செலவைக் குறைக்கும் முன்னெடுப்புகளும் இந்த பட்ஜெட்டில் அதிகம் தெரிகின்றன. அதே வேளையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பொதுச்சமூகத்தின் ஆரோக்கியம் சார்ந்த முக்கிய அறிவிப்புகள் ஓரங்கட்டப்பட்டுள்ளன.
பொதுவாக, நாட்டில் பொதுச் சுகாதார வளர்ச்சி இல்லாமல் பொருளாதார வளர்ச்சியைக் காண்பது கடினம். இந்த ஆண்டின் பட்ஜெட், இந்தியப் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும் மக்களின் ஆரோக்கியத்தை ஒரு முக்கிய முதலீடாக அங்கீகரிக்கும் என்றும், நாட்டின் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்துவதற்கு மேம்பட்ட அளவில் நிதியைக் கொடுக்கும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT