Published : 01 Aug 2024 06:18 AM
Last Updated : 01 Aug 2024 06:18 AM
சென்னை லயோலா கல்லூரி, 2024-2025 இல் நூற்றாண்டுப் பயணத்தைப் புது எழுச்சியோடு தொடர்கிறது. 1925 முதல் 2025 வரை கடந்த 100 ஆண்டுகளில் இக்கல்லூரி இந்திய அறிவுசார் தளத்தில் ஆக்கபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நூற்றாண்டு காலப் பயணமானது விரிவாக்கம், அனைவரையும் உள்ளடக்கிய கல்வி, அறிவுசார் பயணம் என்ற மூன்று கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது.
உருவான பின்னணி: லயோலா கல்லூரி மதராஸ் கத்தோலிக்க மறை மாவட்டப் பேராயர் ஜே.ஆலன் விடுத்த அழைப்பின் அடிப்படையில், இயேசு சபையினரால் (Society of Jesus) நிறுவப்பட்டது. லயோலா கல்லூரியின் வரலாறு 1924 மார்ச் 10 மதராஸ் மாகாணத்தின் ஆளுநர் வெல்லிங்டனும், அவரது மனைவியும் இணைந்து நாட்டிய அடிக்கல்லில் இருந்து தொடங்கியது. தந்தை பிரான்சிஸ் பெட்ரம் முதல் பத்து வருடங்கள் தலைவராகவும் முதல்வராகவும் கல்லூரிக்கான சிறந்த அடித்தளத்தை ஏற்படுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT