Published : 28 Jul 2024 07:24 AM
Last Updated : 28 Jul 2024 07:24 AM
சார்லஸ் புகாவ்ஸ்கி ஓர் அமெரிக்கத் தெருக் கவிஞன் என்கிற லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸின் வர்ணனை என்னை அதிர்ச்சியடைய வைக்கவேயில்லை. புகாவ்ஸ்கி ஒரே இரவில் 10 கவிதைகளும், ஒரே வாரத்தில் 5 சிறுகதைகளும் எழுதிய வேகமான கவிஞன். மளிகைச் சாமான்கள் கொண்டு வரும் பைகளின் மீதுகூட பென்சிலால் அவர் ஏதேனும் கவிதைகளை எழுதியபடி இருப்பார் என்று புகாவ்ஸ்கியின் மகள் மரீனா புகாவ்ஸ்கி குறிப்பிடுகிறார். இவரது 1,000க்கு மேற்பட்ட கவிதைகள் வெளியிடப்பட்டிருந்தாலும் வெளியிடப்படாத புகாவ்ஸ்கியின் கவிதைகள் இன்னமும் இருக்கும் என்றே நினைக்கப்படுகிறது.
சார்லஸ் புகாவ்ஸ்கி தலைமறைவுப் பத்திரிகைகளால் வளர்த்தெடுக்கப்பட்ட ஓர் அமெரிக்கக் கவிஞர்; சிறுகதையாசிரியர்; நாவலாசிரியர். எழுதுவதற்காகப் பலதரப்பட்ட வேலைகளைச் செய்தபடி வாழ்ந்தவர். தட்டு கழுவுபவர், தபால்காரர், லிஃப்ட் இயக்குபவர், பெட்ரோல் போடுபவர், இரவுக் காவல்காரர், நாய் பிஸ்கட் செய்யும் தொழிற்சாலைத் தொழிலாளி, மாடு வெட்டுபவர், சுவரொட்டி ஒட்டுபவர் எனப் பல வேலைகள் செய்தபடி இருந்த இவர், எழுதுவதைச் சலிக்காது செய்துவந்தார். 1959இல் முதல் கவிதைத் தொகுதியுடன் எழுதத் தொடங்கிய சார்லஸ் புகாவ்ஸ்கி 45க்கு மேற்பட்ட கவிதைத் தொகுதிகள், உரைநடை, நாவல்கள், கடிதங்கள் ஆகியவற்றை வெளியிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT