Last Updated : 02 Jul, 2024 06:05 AM

 

Published : 02 Jul 2024 06:05 AM
Last Updated : 02 Jul 2024 06:05 AM

ப்ரீமியம்
போதைப் பொருள் மாஃபியா: மெக்சிகோ கடந்து வந்த பாதை

உலக நாடுகள் ஆர்வத்துடன் கவனித்துவந்த இரண்டு் அரசியல் நிகழ்வுகள் ஜூன் முதல் வாரத்தில் நிகழ்ந்தன. லத்தீன் அமெரிக்க நாடுகளுள் ஒன்றான மெக்சிகோ நாட்டின் அதிபரைத் தேர்வு செய்வதற்காக ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் அதிபர் தேர்தலும், இந்திய மக்களவைத் தேர்தலும் ஜூன் முதல் வாரத்தில் முடிவடைந்தன. இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாகவும், மெக்சிகோ நாட்டின் அதிபராக கிளாடியா ஷீன்பாமும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

முதல் பெண் அதிபர்: மெக்சிகோவில் வாக்களிக்கும் உரிமையின்றிப் பல தேர்தல்களைப் பெண்கள் கடந்துவந்த நிலையில், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை 1953இல் வழங்கப்பட்டது. பாலினச் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் விதத்தில், அரசாங்கத்தின் அனைத்துப் பொறுப்புகளிலும், குறிப்பாக மாநில, நகராட்சித் தேர்தல்களிலும் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான அரசமைப்புத் திருத்தச் சட்டம் மெக்சிகோவில் 2019இல் கொண்டுவரப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x