Published : 09 Feb 2024 06:16 AM
Last Updated : 09 Feb 2024 06:16 AM
தமிழர்கள் தமிழை உணர்வுபூர்வமாகக் கருதும் அதே வேளையில், அறிவியல் மனப்பான்மையுடனும் அதை அணுகுகிறார்கள். அந்த அணுகுமுறையே அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப, தமிழுக்கும் புதுக் குருதி பாய்ச்சிக்கொண்டேயிருக்கிறது. இந்தப் பணியானது இடைவிடாது தொடர் சங்கிலியாக மேற்கொள்ளப்படுவதாலேயே தொழில்நுட்பப் பயணத்தில் தமிழ் தொய்வில்லாமல் பயணப்படுகிறது.
எண்ணையும் எழுத்தையும் கண்ணெனப் போற்றினார் ஔவை. எழுத்து - மொழி தொடர்பானது; எண் - கணக்கு தொடர்பானது. இந்த இரண்டிலும் தமிழர்கள் வல்லமை பெற்றிருந்தார்கள். ‘தமிழ் எண் கணித முறை பொ.ஆ.மு. (கி.மு.) 3000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்க வேண்டும்’ என்று குறிப்பிடுகிறார் வளையாம்பட்டு கு.வெங்கடாசலம் ‘தமிழர் கணக்கியல்’ நூலில்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT