Published : 07 Feb 2024 06:25 AM
Last Updated : 07 Feb 2024 06:25 AM
2024-25 நிதி ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொதுவாக, இடைக்கால பட்ஜெட்டில் கொள்கை அளவிலான மாற்றங்களோ பெரிய அறிவிப்புகளோ இருக்காது என்றாலும், மக்களவைத் தேர்தல் நெருங்கிவருவதால், கவர்ச்சிகரமான அறிவிப்புகள் எதிர்பார்க்கப்பட்டன. அப்படியான அறிவிப்புகள் ஏதும் இல்லையென்றாலும், நீண்ட கால நோக்கிலான திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக, நிதி அமைச்சகம் பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிடுவது வழக்கம். பொருளாதார ஆய்வறிக்கையில் நாட்டின் பொருளாதார நிலை, வளர்ச்சி, பணவீக்கம் உள்ளிட்டவை சார்ந்த பல்வேறு குறிப்புகள் இடம்பெறும். அடுத்துவரும் நிதி ஆண்டில் பொருளாதாரம் பயணிக்கவிருக்கும் திசையைத் துலக்கப்படுத்தும் ஆவணமாகப் பொருளாதார ஆய்வறிக்கை விளங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT