Published : 28 Jan 2024 09:18 AM
Last Updated : 28 Jan 2024 09:18 AM
பேராசிரியர் துப்யான்ஸ்கி குறித்து அறிந்தவர்கள் அவரது தமிழார்வம், அவர் பிறந்த காலத்திலிருந்தே தோன்றிவிட்டதோ எனக் கருதுவர். 1960களின்இடைக்காலத்தில் ரஷ்யாவில் வாழ்ந்த மக்களுக்குத் தமிழ் மொழி பற்றிய எவ்வித எண்ணங்களும் இருக்கவில்லை. 1965ஆம் ஆண்டு மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக்காகச் சேரும்வரை தமிழ் மொழி பற்றிய எண்ணம் ஏதும் அவருக்கு இருந்திருக்காது என்றே நான் கருதுகிறேன் என்கிறார் அவரது மகள் ததியானா. அவர் அன்றைய, கீழைத்தேய மொழிகள் நிறுவனத்தில் இணைந்தபோது, அப்போதைய வாய்ப்பாக இருந்த ஜப்பானிய மொழியையே அவர் தேர்ந்தெடுப்பார் என அவரது நண்பர்கள் பலரும் கருதினர். ஆனால், அந்நிறுவனத்தின் அன்றைய துறைத் தலைவர், ஆர்வமுள்ள மாணவராக இருந்த துப்யான்ஸ்கியிடம் ரஷ்யாவில் புதிதாகக் கற்பிக்கப்படவிருந்த தமிழ் மொழி பற்றிக் குறிப்பிட்டதும் அவரது இதயத்தில் தமிழ்க் காதல் எனும் பொறி உண்டாக, அப்போது தமிழ் கற்ற குழுவில் இணைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT