Published : 26 Jan 2024 06:20 AM
Last Updated : 26 Jan 2024 06:20 AM
தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 38% குறைந்துள்ளதாக வெளியாகியிருக்கும் தகவல், பொதுச் சுகாதாரச் செயல்பாடுகள் மீதான நம்பிக்கையை ஆழப்படுத்துகிறது. தமிழ்நாட்டில் 2020ஆம் ஆண்டில், 1,000 குழந்தைகளுக்கு 13ஆக இருந்த இறப்பு விகிதம், ஏப்ரல் 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் 8.2ஆகக் குறைந்துள்ளது.
பொதுச் சுகாதார அளவீடுகளில் பெரும்பாலான பிரிவுகளில் தேசிய அளவீடுகளோடு ஒப்பிடுகையில், தமிழகம் எப்போதுமே முன்னிலை வகிக்கும். அதன்படி 2023 தேசிய அளவீட்டுடன் (26.619%) ஒப்பிடுகையில் தமிழகத்தில் குழந்தை இறப்பு விகிதம் குறைவாகவே இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT