Published : 23 Nov 2023 06:13 AM
Last Updated : 23 Nov 2023 06:13 AM
2023 இல் தென்மேற்குப் பருவமழை போதுமான மழைப்பொழிவைக் கொடுக்காததன் விளைவாக விவசாயத்தில் சரிவு ஏற்பட்டிருப்பதாகத் தற்போது விவாதங்கள் நடக்கின்றன. எப்போதெல்லாம் தென்மேற்குப் பருவமழையின் அளவு குறைகிறதோ, அப்போதெல்லாம் விவசாய உற்பத்தி பாதிக்கப்படுவதோடு, கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். மறுபுறம், கடந்த ஐம்பது ஆண்டுகளில், நீர்ப்பாசன உள்கட்டமைப்பில் இந்தியா அபரிமிதமான வளர்ச்சி பெற்றுள்ளதால், விவசாயத்தில் பருவமழையின் தாக்கம் காலப்போக்கில் குறைந்துள்ளது என்றும் சிலர் வாதிடுகின்றனர். நிதர்சனம் என்ன?
படிப்படியான சரிவு: இந்தியா சராசரியாக ஓர் ஆண்டில் சுமார் 1,180 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது. இந்த மழையளவு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ள நான்கு முக்கிய மழை மண்டலங்களான வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியா, மத்திய இந்தியா, தென் தீபகற்ப இந்தியா ஆகியவற்றுக்கு இடையே பெரியளவில் வேறுபடுகிறது. ஓர் ஆண்டின் மொத்த மழையளவில், தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் பெறப்படும் மழை மட்டும் சுமார் 75% அல்லது 870 மில்லிமீட்டா். எனவே, தென்மேற்குப் பருவமழையின் அளவு அதன் சராசரி மழைப்பொழிவிலிருந்து, பெரியளவில் குறைந்தால் விவசாயத்தில் கணிசமான பாதிப்பு ஏற்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT