Published : 06 Oct 2023 06:13 AM
Last Updated : 06 Oct 2023 06:13 AM
இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் (1967, தமிழ்நாடு அரசு) கொண்டுவரப்பட்டு, கிட்டத் தட்ட 56 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளவரசன் என்ற இளைஞர், தான் செய்துகொண்ட சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்டபூர்வ அங்கீகாரம் வழங்காமல், சென்னை உயர் நீதிமன்றம் அதை ஒரு குற்றச்செயலாகக் கருதும் என ஒருபோதும் நினைத்திருக்க மாட்டார்.
பழைய வழக்குகள்: 1953இல் ‘சிதம்பரம் செட்டியார் எதிர் தெய்வானை ஆச்சி’ வழக்கில் இந்து மதச் சடங்குகளை முறையாகப் பின்பற்றவில்லை எனக் கூறி, அவர்களின் திருமணத்தைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்க மறுத்த அதே மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் செயலை இதனோடு ஒப்புநோக்க வேண்டும். 1953இல் இருந்த அதே நிலை இப்போது இல்லை என உறுதியாகக் கூறலாம். சமயச் சடங்கில்லாத் திருமணங்களை அங்கீகரிக்கும் சட்ட விதிகள் அப்போது மதராஸ் மாநில வரம்புக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT