Published : 21 Jul 2023 06:10 AM
Last Updated : 21 Jul 2023 06:10 AM

ப்ரீமியம்
அஞ்சலி: உம்மன் சாண்டி (1943 - 2023) | அணிகளின் அரசியலாளர்

மக்கள் கூட்டத்தின் தலைவர் என்கிற வகையில் அறியப்பட்டவர் உம்மன் சாண்டி. கேரள காங்கிரஸ் மாணவர் அமைப்பின்வழி அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்தவர். இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு ஆட்சிக் காலத்தில் குட்டநாடு படகுக் கட்டணத்தை 1 அணாவிலிருந்து 10 காசுகளாக உயர்த்தியதற்கு எதிராக நடந்த ‘ஓரணா சமரம்’தான் இவரை அடையாளம் காட்டிய முதல் போராட்டம். ஏ.கே.ஆண்டனி போன்ற தலைவர்களின் பரிச்சயம் கிடைத்தது. காங்கிரஸின் மாணவ அமைப்பான கேரள மாணவர் சங்கத்தின் ஆற்றல்மிக்க தொண்டராகச் செயல்பட்டார்; அதன் மாநிலத் தலைவரானார்.

1970இல் தனது 27ஆம் வயதில் புதுப்பள்ளி தொகுதி உறுப்பினராகக் கேரள சட்டமன்றத்துக்குள் காலடி வைத்தார். அதிலிருந்து 53 ஆண்டுகளுக்கு நீண்ட சட்டமன்றப் பணியை உம்மன் சாண்டி ஆற்றியிருக்கிறார். இவரைப் பற்றிக் குறிப்பிடும் பலரும் இவரை ‘அணிகளின் தலைவர்’ என்பர். நாள் ஒன்றுக்குப் பத்துப் பதினைந்துக் கூட்டங்கள், தொண்டர்கள் சந்திப்பு எனத் தன் வாழ்நாளைக் கட்சி அணிகளுக்காக அர்ப்பணித்தவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x