Last Updated : 02 Jul, 2023 07:45 AM

 

Published : 02 Jul 2023 07:45 AM
Last Updated : 02 Jul 2023 07:45 AM

ப்ரீமியம்
தமிழ் மின் நூலகம்: ஓர் அறிவுச் சுரங்கம்!

ஒரு காலத்தில், புத்தகங்களை வாசிக்க நூலகத்தைத் தேடிச் செல்ல வேண்டிய சூழல் இருந்தது. இன்று அப்படியல்ல. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதால் வாசகர்களைத் தேடி வருகிறது மின் நூலகம். அனைவரும் இருந்த இடத்தில் இருந்தபடியே நூலகத்தை அணுகலாம்; அரிய புத்தகங்களையும் வாசிக்கலாம்; பதிவிறக்கிக்கொள்ளலாம். அப்படியொரு மின் நூலகத்தைத் (www.tamildigitallibrary.in) தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கியுள்ளது. இந்த மின் நூலகத்தில் அரிய இதழ்களும் நூல்களும் தொகுக்கப்பட்டுள்ளன.

நூலகம் வளர்ந்த கதை: தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் மின் நூலகம் ஒரு மிகப் பெரும் ஆவணக் கருவூலம். தற்போதைய தொழில்நுட்பப் புரட்சிக் காலத்தில் மின்னுருவாக்கத் தொழில்நுட்பம் (scan) அச்சுத் துறையில் பல்வேறு வியக்கத்தக்க மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. அந்த மாற்றத்தின் விளைவே இந்த மின் நூலகம். இது ‘தமிழ் இணையக் கல்விக்கழக’த்தின் ஒரு பகுதியாகச் செயல்படுகிறது. தமிழ் இணையக் கல்விக்கழகத்தை 17.02.2001 அன்று முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி தொடங்கிவைத்தார். 2002இல் தமிழ் மின் நூலகம் (www.tamilvu.org) அமைக்கும் முயற்சியில் இறங்கியது தமிழ் இணையக் கல்விக்கழகம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x