Published : 28 Jun 2023 06:20 AM
Last Updated : 28 Jun 2023 06:20 AM
கடந்த பல வாரங்களாக மணிப்பூர் எதிர்கொண்டிருக்கும் மானுடசோகத்துக்கும் சமூகக் கொந்தளிப்புக்கும் பிரிவினைவாத அரசியலே காரணம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால், இனவரைவியல் சொற்கள் சார்ந்து ஏற்பட்ட குழப்பம், வெவ்வேறு சமூகங்களின் தோற்றம் குறித்த தரவுகளின் போதாமை, அறிவியல்பூர்வமான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இல்லாதது ஆகிய பிரச்சினைகளும் இந்த நெருக்கடிக்குப் பங்களித்துள்ளன.
பட்டியல் பழங்குடியினர் என்று அங்கீகரிக்கப்படுவதற்கான மெய்தேய் (Meitei) சமூகத்தினரின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு ஆதரவாக அளிக்கப்பட்ட உயர் நீதிமன்ற உத்தரவு, மணிப்பூரில் வன்முறை மோதல்களுக்கும் ரத்தம் சிந்துதலுக்கும் வித்திட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT