Published : 09 Sep 2024 06:18 AM
Last Updated : 09 Sep 2024 06:18 AM
இந்தியா தனது எல்லையை ஏழு நாடுகளோடு பகிர்ந்துகொள்கிறது. வடக்கே சீனா, பூடான், நேபாளம்; வடமேற்கே ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான்; கிழக்கே வங்கதேசம், மயன்மார். இவை தவிர கடல் எல்லையைத் தாண்டி, தெற்கே இலங்கையும் மாலத்தீவும். இந்த ஒன்பது நாடுகளிலும் ஆகக் குறைந்த ஊடக கவனம் பெறுவது மயன்மார்.
இவ்வளவுக்கும் ஒரு காலத்தில் இந்தியர்கள், குறிப்பாகத் தமிழர்கள் செறிவாக வாழ்ந்த நாடு அது. அந்நாளில் அதன் பெயர் பர்மா. இன்றும் தமிழகத்தின் பல ஊர்களில் ‘பர்மா காலனிகள்’ இருக்கின்றன. இப்போதும் சுமார் 10 லட்சம் தமிழர்கள் மயன்மாரில் வாழ்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT