Published : 15 Nov 2016 10:28 AM
Last Updated : 15 Nov 2016 10:28 AM

நல் வரவு: சர்வமும் நானே

சர்வமும் நானே (முழுநீள வண்ணப் பதிப்பு)

கதை: போசெல்லி; ஓவியம்: டோட்டி

தமிழில்: எஸ். விஜயன்,

விலை: ரூ. 350

லயன் காமிக்ஸ்,

பிரகாஷ் பப்ளிஷர்ஸ், சிவகாசி 626189,

04562-272649



டெக்ஸ் வில்லர் குழுவின் சாகசக் கதைகள் காமிக்ஸ் வாசகர்களின் பெரும் அபிமானம் பெற்றவை. குற்றங்களைக் களையும் வெள்ளையின ரேஞ்சரான டெக்ஸ் வில்லர், செவ்விந்தியப் பழங்குடியினக் கிராமத்தின் தலைவரும்கூட. சமூக விரோதக் கும்பலுடன் இணைந்து அட்டூழியம் செய்யும் அதிகார வர்க்கத்தை டெக்ஸ் வில்லரும் அவரது குழுவும் தோலுரிக்கும் கதைகளின் பட்டியலில் இதுவும் ஒன்று. வழக்கமான அரிசோனா பாலைவனத்தையும் தாண்டி, கடல் பயணம், படகு சாகசம் என்று விரியும் கதை. தீபாவளி மலராக வெளியாகியிருக்கும் இந்த காமிக்ஸின் ஒவ்வொரு சட்டகத்திலும் அதிரடி ஆக்‌ஷன்!



இளைக்கலாம் வாங்க!

எடையைக் குறைக்கும் எளிய பயணம்

ஷைனி சுரேந்திரன்

விலை: ரூ. 90

கவிதா பப்ளிகேஷன், சென்னை-17

044-24364243

உணவுப் பழக்கம், உறக்கம், மனஆரோக்கியம் போன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு செயல்படுவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம் என்பதே இந்நூலின் ஆலோசனை. உடல் எடையைக் குறைத்த நிஜ வாழ்வின் உதாரணங்களும் நூலில் இடம்பெற்றுள்ளன. எடையைக் குறைக்கத் தேவையான சிறிய சிறிய குறிப்புகள் நூலில் நிரம்பியுள்ளன. உடல் பருமனைக் குறைத்து மெல்லிய தோற்றம் பெற விரும்புவர்களுக்கான நூல்.



திறனாய்வுக் கோட்பாடுகளும் பன்முக வாசிப்புகளும்

ந. இரத்தினக்குமார்

விலை: ரூ.200/-

கயல்கவின் பதிப்பகம், சென்னை-90

99445 83282

பண்டை இலக்கியம், சூழலியல் பெண்ணியம், நவீனக் கவிதைகளின் பாலியல் அரசியல், இனவரைவியல் நாவல் குறித்த வாசிப்பு, பின்காலனிய வாசிப்பில் அரங்கமும் சினிமாவும் என இந்நூலின் தளங்கள் விரிவடைகின்றன. ஆசிரியரின் விமர்சன நோக்கு இணைய எழுத்துக்களை நோக்கியும் நகர்ந்துவந்துள்ளது. கருவாச்சி காவியமும், கள்ளிக்காட்டு இதிகாசமும் அவற்றின் காலகட்டத்து அரசியலை விலக்கியது ஏன் என்ற கேள்வி முக்கியமானது. வாசகர் பெருக்கத்தினால் படைப்பாளிக்கு நேரும் அடையாளச் சிக்கலைப் பற்றியும் ஆசிரியர் விவாதித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x