Published : 18 Jun 2017 10:26 AM
Last Updated : 18 Jun 2017 10:26 AM
ஓவியர் ஆர்.வி. ராஜேஷின் ஓவியங்கள் ‘உள்ளொளியின் அறிவியல்’(Science of Insight) என்ற தலைப்பில் சென்னை தக்ஷிணசித்ராவின் காதம்பரி ஓவியக் காட்சி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த ஓவியரான இவர் காட்சித் தொடர்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 2011-ம் ஆண்டிலிருந்து இவருடைய படைப்புகள் ஓவியக் காட்சிகளில் இடம்பெற்றுவருகின்றன. அவருடைய படைப்புகள் பெரும்பாலும் கலப்பு ஊடகங்களில் (Mixed media) உருவாக்கப்படுகின்றன. தமிழ்நாடு ஓவிய நுண்கலைக் குழு விருது, மும்பை பிரஃபுல்லா ஆர்ட் ஃபவுண்டேஷன் விருது போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார் இவர்.
இடம்:
காதம்பரி ஓவியக் காட்சி அரங்கு, தக்ஷிணசித்ரா, முட்டுக்காடு.
நாட்கள்:
17 30, ஜூன்- 2017, (செவ்வாய் விடுமுறை)
நேரம்:
காலை 10 மணியிலிருந்து மாலை 6 மணி வரை
- கனி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT