Published : 23 Oct 2025 05:47 AM
Last Updated : 23 Oct 2025 05:47 AM

எழுத்தாளர் தேன்மொழிக்கு வைக்கம் விருது

சென்னை: தமிழக அரசின் 2025-ம் ஆண்​டுக்​கான வைக்​கம் விருது எழுத்​தாளர் தேன்​மொழி சவுந்​தர​ராஜனுக்கு வழங்​கப்பட உள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்​ட செய்​திக்​குறிப்​பு: நடப்பு ஆண்​டுக்​கான வைக்​கம் விருதை தேன்​மொழி சவுந்​தர​ராஜனுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது.

அமெரிக்​கா​வில் வசிக்​கும் தேன்​மொழி சவுந்​தர​ராஜன், இந்​திய அமெரிக்க ஒடுக்​கப்​பட்ட மக்​களுக்​கான உரிமை ஆர்​வலர் மற்​றும் எழுத்​தாளர் ஆவார்.

அவரது பெற்​றோர் மதுரை மாவட்​டத்தை சேர்ந்​தவர்​கள். அவருக்கு ரூ.5 லட்​சத்​துக்​கான காசோலை, பாராட்​டுச் சான்​றிதழ் மற்​றும் தங்க முலாம் பூசிய பதக்​கம் முதல்​வ​ரால் வழங்​கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x