Published : 11 Oct 2025 06:34 AM
Last Updated : 11 Oct 2025 06:34 AM

‘பாரதியின் காளி’ முதல் ‘இராஜேந்திர சோழனின் கங்கையும் - கடாரமும்’ வரை | நூல் வரிசை

பாரதியின் காளி
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
சந்தியா பதிப்பகம், விலை: ரூ.160
தொடர்புக்கு : 24896979

பாரதியின் இலக்கியப் படைப்புகளில் அவரது கொள்கை, தத்துவம், கவி ஆளுமை வெளிப்படும் பல்வேறு அம்சங்களையும் ஆராய்கிறது. பாரதியை புதிய நோக்கில் புரிந்துகொள்ள உதவும் நூல்.

அன்பின் அலெக்ஸா...
மைதிலி கஸ்தூரிரங்கன்
அகநி வெளியீடு, விலை: ரூ.120
தொடர்புக்கு : 9444360421

நிலத்தின் காட்சிகள், மனித இயல்புகள், பிரியமான உறவின் சிக்கல்கள் என சின்னச் சின்னதாய் எளிய மொழியில் பின்னப்பட்ட கவிதைகள்.

உரைவேந்தரின் உரைமாட்சி
முனைவர் சோ.ந.கந்தசாமி
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
விலை: ரூ. 120

பதிற்றுப்பத்து, புறநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை மணிமேகலை ஆகிய நூல்களுக்கு விளக்கமான உரைகளை எழுதிய ஔவை சு.துரைசாமிப்பிள்ளையின் உரை நயம் விதந்தோதப்பட்டுள்ளது. அண்ணாமலை, மலாயா, தமிழ்ப் பல்கலைக்கழகம் என பல பல்கலைக்கழகங்களிலும் பணியாற்றிய முதுபெரும் தமிழறிஞர் பேரா.சோ.ந.கந்தசாமியின் இலக்கிய ஆராய்ச்சி நூல்.

மொழியியல் வரலாறு
பேரா.ப.மணிமாறன்
தனம் பதிப்பகம், விலை: ரூ.420
தொடர்புக்கு: 9786860861

ஒலியியல், சொல்பிறப்பு, தொடரியல், எழுத்துருவம், படிநிலை இலக்கணம், மொழியியல் கோட்பாடு ஆகிய உட்பிரிவுகளோடு அமைந்துள்ள மொழியியல் வரலாற்றை அறிஞர்களின் ஆய்வுக்கண்ணோட்டத்தோடு நுட்பமாக எடுத்துரைக்கிறது இந்நூல்.

இராஜேந்திர சோழனின் கங்கையும் - கடாரமும்
அறம் கிருஷ்ணன்
அறம் பதிப்பகம், விலை: ரூ.600
தொடர்புக்கு 7904509437

இராஜேந்திர சோழன் வெற்றிக்கொடி நாட்டிய இடங்கள், நேரில் கண்ட அனுபவம் மூலம் நூலாக்கப்பட்டுள்ளது. மெய்க்கீர்த்திகள், செப்பேடுகள், கல்வெட்டுகள் மற்றும் இலக்கியச் சான்றுகளில் குறிப்பிடப்படும் கங்கை (ஒடிசா) பகுதிகள், மலேசியாவில் உள்ள கடாரம் (பூஜாங் பள்ளத்தாக்கு) ஆகிய இன்றைய பகுதிகள் உரிய படங்களுடன் இந்நூலில் விளக்கப்பட்டுள்ளன.

திண்ணை | ‘வெளி வட்டங்கள்’ நாவல் அறிமுகம்: போதிவனம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் நாடகம் & அரங்கக் கல்வித் துறை இணைந்து நடத்தும் எஸ்.எம்.ஏ.ராம் எழுதிய 'வெளி வட்டங்கள்' நாவல் அறிமுகம், இன்று (11-10-2025) மாலை, 5.30 மணிக்கு சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் எழுத்தாளர் அ.வெண்ணிலா, இரா.கண்ணன், தளம் இதழ் ஆசிரியர் பாரவி, கவிஞர் கௌரி ராமன், லேக் ரீட்ஸ் காப்பாளர் அரவிந்த் பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

எம்.பி.சீனிவாசன் நூற்றாண்டு: ‘இசைமேதை எம்.பி.சீனிவாசன் நூற்றாண்டு கொண்டாட்டம்' தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் இன்று (11-10-2025) மதியம் 2 மணிக்கு, சென்னை தேனாம்பேட்டை அன்பகத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வுக்கு நாடகவியலாளர் பிரளயன் தலைமை வகிக்க, இசையமைப்பாளர் தேவா, சென்னை இளைஞர் சேந்திசைக் குழுவின் இயக்குநர் டி.ராமச்சந்திரன், காலச்சுவடு பொறுப்பாசிரியர் கவிஞர் சுகுமாரன், மதுரை அமெரிக்கன் கல்லூரி மேனாள் பேராசிரியர் இரா.பிராபகர், எம்.பி.சீனிவாசன் சகோதரி ஜெயந்தி, இசை விமர்சகர் ஷாஜி, எழுத்தாளர் இக்பால்அகமது, பதிப்பாளர் சிவ.செந்தில்நாதன், நா.பாலகிருஷ்ணன், இரவீந்திரபாரதி, பேரா.சுப.அருணாசலம் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். சென்னை இளைஞர் சேர்ந்திசைக் குழு மற்றும BEAT சேர்ந்திசைக் குழுவினர் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

குருதத் நூற்றாண்டு சிறப்பு மலர்: குருதத் நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வு, களம் புதிது சார்பில், இன்று (11-10-2025) மாலை 5 மணிக்கு, சென்னை, கோடம்பாக்கம், கார்ப்பரேஷன் காலனி தெரு, அஜந்தா டவர்ஸ் படைப்பு அரங்கத்தில் நடைபெறுகிறது. கவிஞர் கரிகாலன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், கதிர், நந்தா பெரியசாமி, ஹரிஹரன், வசந்தபாலன், ஒளிப்பதிவாளர்கள் செழியன், சி.ஜெ.ராஜ்குமார், எழுத்தாளர்கள் ஷாஷி சென், ஆர்.அபிலாஷ், சிவபாலன் இளங்கோவன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

‘மறத்தீ’ சிறுகதைகள் நூல் அறிமுகம்: சாரோனின் 'மறத்தீ' சிறுகதைகள் நூல் அறிமுக நிகழ்வு, இன்று (11-10-2025) மாலை 5 மணிக்கு சென்னை, கே.கே.நகர், முனுசாமி சாலையில் அமைந்துள்ள டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற உள்ளது. லயோலா சமூக அறிவியல் பயிற்சி மற்றும் ஆய்வு மையத்தின் பேராசிரியர் பெர்னார்ட் டி'சாமி தலைமை வகிக்க, ஊடகவியலாளர், சுந்தரபுத்தன், கவிஞர் தமிழ் இயலன், திரைக்கலைஞர் கவிதாபாரதி, ஊடகவியாளர் கவிதா முரளிதரன், எழுத்தாளர் & இயக்குநர் பாஸ்கர் சக்தி, எழுத்தாளர் ஜெ.தீபலட்சுமி உள்ளிட்டோர் உரையாற்ற, நூலாசிரியர் சாரோன் ஏற்புரையாற்றுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x