Published : 27 Sep 2025 07:35 AM
Last Updated : 27 Sep 2025 07:35 AM

‘விடையில்லா வினாக்கள்’ முதல் ‘வந்த பாதை - ஒரு பார்வை’ வரை | நூல் வரிசை

விடையில்லா வினாக்கள்
சிறுகதைகள்
ஏ.சாந்தி பிரபு
கவிதைச்சாரல் பதிப்பகம்
விலை ரூ.150
தொடர்புக்கு:6382659118

பல்வேறு விஷயங்கள் குறித்து ஆசிரியர் எழுதியுள்ள 15 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு.

வள்ளலார் கண்ட தருமச்சாலை
ஆ.தி.பகலன்
நவீன மித்ரா பப்ளிகேஷன்ஸ்
விலை ரூ.275
தொடர்புக்கு:7200827836

பசித்தோருக்குத் தருமச்சாலை அமைத்து உணவிட்ட வள்ளலாரின் வாழ்க்கை மற்றும் உலகின் பசிப்பிணியை நிரந்தரமாக போக்க என்ன செய்யலாம் என்பது பற்றி ஆசிரியர் எழுதியுள்ள கட்டுரைகள்.

நெடி கவிதைகள்
தச்சன் இரா.நாகராஜன்
முரண்களரி
விலை ரூ.80
தொடர்புக்கு:9092545686

அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட எளிமையான கவிதைகளை கொண்ட நேர்த்தியான தொகுப்பு.

அரளிப்பூ மனிதர்கள் சிறுகதைகள்
ந.அறிவரசன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை ரூ.115
தொடர்புக்கு: 044-26251968

நவீன் வாழ்க்கை முறையால் பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களின் வாழ்வியல் முறைகள் உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசும் 16 சிறுகதைகளின் தொகுப்பு.

தென்னிந்தியாவில் சத்ரபதி சிவாஜி
தமிழில் கோ.முருகன்
விலை ரூ. 150
சம்வித் பிரகாஷன் மீடியா
தொடர்புக்கு:8608186868

திருவண்ணாமலை, ஸ்ரீசைல ஆலயம் உள்ளிட்ட தென்னிந்திய நிலபரப்பு முழுவதும் சத்ரபதி சிவாஜியின் பயணம் பற்றி விவரிக்கும் நூல்.

வந்த பாதை - ஒரு பார்வை
ராணிமைந்தன்
வானதி பதிப்பகம்
விலை: ரூ.600
தொடர்புக்கு: 24342810

பிரபலமானவர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதுவதில் பெயர்பெற்றவர் மூத்த பத்திரிகையாளர் ராணி மைந்தன். எண்பதாவது வயதில், அவருடைய வாழ்க்கை வரலாற்றை ஆர்ட் காகிதத்தில் வண்ணப் பக்கங்களில் வானதி வெளியிட்டுள்ளது. எனினும், தன் வரலாற்றைக் குறைத்துக் கொண்டு, தான் சந்தித்த அந்த பிரபல மனிதர்களையும், அவர்களுடனான தன் நட்பையும் பற்றி இதுவரை சொல்லாத தகவல்களைப் பேசியிருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x