Published : 30 Aug 2025 07:09 AM
Last Updated : 30 Aug 2025 07:09 AM
சமூகத்தில் பல தரப்பு மக்களுடனும் தொடர்ச்சியாக ஆழ்ந்த உரையாடலை நிகழ்த்தக் கூடிய திறன் பெற்றிருப்பவர்கள், வாழ்க்கையில் எளிதாக வெற்றி பெறுகிறார்கள். இத்தகைய திறன் பெற்றோர் எந்தத் துறையிலும் வெற்றி பெற முடியும். உரையாடல் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டுமானால், அவரிடம் கேள்வி கேட்கும் திறன் அவசியம் இருக்க வேண்டும். அதுவும் தேர்ந்தெடுத்த, நல்ல கேள்விகளைக் கேட்கும் திறன் இருப்பது கூடுதல் பலனைத்தரும்.
கேள்விக்குப் பதில் கூறப் பலரால் முடியும். ஆனால், பதில்களிலிருந்து புதிய கேள்விகளை எழுப்பச் சிலரால் மட்டுமே முடியும். ஆக, மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில்களை மட்டும் சொல்லிக் கொண்டிருக்காமல், அந்தப் பதில்களிலிருந்து புதிது புதிதாகக் கேள்விகளை எழுப்பும் திறனை சிறு வயதிலிருந்தே வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு இந்நூல் நல்ல வழிகாட்டியாக இருக்கிறது.
கேள்விகள் கற்றலுக்கான திறவுகோல்
முனைவர் பெ. சசிக்குமார்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ.150
ஆன்லைனில் பெற : https://store.hindutamil.in/publications
தொடர்புக்கு: 7401296562
திண்ணை | நாவல் வெளியீடு: ‘எழுத்து’ தமிழிலக்கிய அமைப்பு சார்பில் வழங்கப்படும் 2024ஆம் ஆண்டுக்கான சௌந்தரா கைலாசம் இலக்கியப் பரிசு (ரூ.2 லட்சம்) பெற, எழுத்தாளர் ஆத்மார்த்தி எழுதிய ‘தேவதாஸ்’ என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்நாவலின் வெளியீட்டு விழா இன்று (30-08-2025, சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு சென்னை தி.நகரில் உள்ள சர்.பி.டி. தியாகராயர் அரங்கத்தில் நடைபெறுகிறது.
‘எழுத்து’ அமைப்பு மற்றும் ‘கவிதா பதிப்பகம்’ இணைந்து நடத்தும் இவ்விழாவுக்கு மத்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகிக்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் நாவலின் முதல் பிரதியை வெளியிட, கவிஞர் வைரமுத்து பெற்றுக் கொள்கிறார். முனைவர் அரங்க மல்லிகா, முனைவர் பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் ஆத்மார்த்தி, கவிதா பதிப்பகத்தின் சேது.சொக்கலிங்கம், கவிஞர் இலக்கியா நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மு.வேலாயுதத்துக்கு பாராட்டு விழா: கோவை விஜயா பதிப்பக நிறுவனர் மு.வேலாயுதத்துக்கு, 48 ஆண்டுகள் பதிப்புலக சாதனைக்காக பாராட்டு விழா, சென்னை ராயப்பேட்டை, டீச்சர்ஸ் காலனி, ஸ்ரீகிருஷ்ணாபுரம் தெருவில் இன்று (30-08-2025, சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இந்நிகழ்வில், முனைவர் வெ.இறையன்பு, நடிகர் சிவகுமார், மரபின் மைந்தன் முத்தையா, மு.வேலாயுதம், சிறுவாணி சங்கத் தலைவர் கலா பாலசுந்தர் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT