Published : 28 Jun 2025 06:24 AM
Last Updated : 28 Jun 2025 06:24 AM
நம்முடைய நாட்டில் துரதிர்ஷ்டவசமாக அறிவியல் கல்வி என்று சொன்னால் கைகளால் செய்து பார்க்கும் செயல்பாடுகளுக்குப் பெரிய மதிப்புக் கொடுப்பதில்லை. ஒரு பேச்சாக, தத்துவமாக அல்லது ஒரு கருத்துருவாகச் சொல்வதை மட்டும்தான் நாம் அறிவியல் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதாவது ஆங்கிலத்தில் Theoretical Science என்று சொல்லுவார்கள். அதாவது கோட்பாடு அளவிலான அறிவியல். இதைத்தான் அறிவியல் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
செய்து பார்த்தல் போன்ற விஷயங்களை நாம் பள்ளிப் பாடப்புத்தகங்களில் வைத்தால் கூட, அவை எல்லாம் ஒரு Demonstration - செய்து காட்டுதல் என்ற அளவில் மட்டுமே நடைபெறுகின்றன. நமது கைகளால் பல்வேறு செயல்பாடுகளை மிகவும் நுணுக்கமாக செய்து பார்ப்பதுதான் அறிவியல் கல்வி கற்றலில் மிகவும் முக்கியமான அம்சம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT