Last Updated : 19 Apr, 2025 07:34 AM

 

Published : 19 Apr 2025 07:34 AM
Last Updated : 19 Apr 2025 07:34 AM

ப்ரீமியம்
அறிமுகமும் ஆவணமும் | நூல் வெளி

தமிழில் தலித் இலக்​கிய உரு​வாக்​கத்​தின் பின்​புலத்​தை​யும் முன் நகர்​வை​யும் குறித்த செறி​வான உரை​யாடலாக அமைந்​துள்​ளது இந்த நூல். மராட்​டிய, கன்​னட, குஜ​ராத்​திய தலித் இலக்​கி​யங்​களின் தொடக்க முயற்​சிகள், தலித் சிந்​தனை​களி​லும் அரசி​யல் புரிதல்​களி​லும் நிகழ்ந்த விவாதங்​கள், தலித் இயக்​கங்​கள், கவிதைகள், புனை​வு​கள், அல்​புனை​வு​கள், அரங்​கச்​செயல்​பாடு​களில் தலித், தலித் அல்​லாதோரின் பங்​களிப்​பு​கள் ஆகியன பற்றி வரலாற்​றுணர்​வோடு எழுதப்​பட்ட பதினேழு கட்​டுரைகளின் தொகுப்​பாக இந்​நூல் அமைந்​துள்​ளது.

ஒடுக்​கப்​பட்ட மக்​களை ஒருங்​கிணைக்க ஜோதி ராவ்​புலே உரு​வாக்​கிய ‘தலித்’ என்ற சொல் குறித்து அம்​பேத்​கருடைய நிலைப்​பாட்​டை​யும் பின்​னாளில் இச்​சொல் ஒரு குறிப்​பிட்ட சாதி சார்ந்த சொல்​லாகச் சுருங்​கிப் போனதுடன் சாதிக்​கும், அதி​காரத்​திற்​கும் எதி​ராக எழுந்த தலித் இலக்​கி​யம் குறிப்​பிட்ட சாதி​யினர் எழுதும் இலக்​கிய​மாகப் புரிந்து கொள்​ளப்​படு​வதற்​குப் பின்​னுள்ள அரசி​யலை​யும், தலித் சொல் குறித்த ஆய்​வாளர்​களின் அறிஞர்​களின் விமர்​சனங்​களை​யும், விவாதங்​களை​யும் இந்​நூலில் ஆசிரியர் தொகுத்​துத் தந்​திருக்​கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x