Published : 06 Apr 2025 12:53 PM
Last Updated : 06 Apr 2025 12:53 PM
சென்னை: எழுத்தாளர் இராம.பழனியப்பன் எழுதிய 'இஎம்ஐ இல்லா வாழ்க்கை' என்ற நூலின் வெளியீட்டு விழா சென்னை 'இந்து தமிழ் திசை ' அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்து 'தமிழ் திசை பதிப்பகம் பதிப்பித்துள்ள இந்நூலின் வெளி யீட்டு விழாவுக்கு பதிப்பகத்தின் பொறுப்பாசிரியர் வி.தேவதாசன் தலைமை வகித்தார். பொருளாதார நிபுணர் சோம.வள்ளியப்பன் நூலை வெளியிட. ஜின்கோஸ் இந்தியா நிறுவனத்தின் முதன்மை ஆலோசகர் சரோ வேல்ராஜன், எழுத்தாளரும். பேச்சாளருமான சிவக்குமார் பழனியப்பன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் சோம.வள்ளியப்பன் பேசியதாவது: 'இஎம்ஐ இல்லா வாழ்க்கை' பொருளாதாரம் தொடர்பாக தமி ழில் எளிய நடையில் வந்துள்ள சிறப்பான நூல். மாதாந்திர தவணை எனப்படும் இஎம்ஐ இல் லாமல்வாழ வேண்டும்என்பதுஒவ் வொருவரின் கனவு. ஆனால், இன்றைய டிஜிட்டல் உலகில் நிறைய பேர் இஎம்ஐ காரணமாக மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். அத்தகைய மக்களிடம் விழிப் புணர்வை ஏற்படுத்துவதோடு, இஎம்ஐ சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகளையும் இந்த நூல் சொல்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.
எழுத்தாளர் சிவக்குமார் பழனி யப்பன் பேசும்போது, "தற் போதைய விளம்பர உத்திகள் காரணமாக தேவையற்ற பொருட் களையும் கூட வாங்கிக் குவிப்ப வர்களாக மக்கள் மாறியுள்ளனர். அதனால் கடனில் சிக்கி அவதிப் படுகிறார்கள். இதிலிருந்து மீண்டு வர விரும்புவோருக்கு இந்த நூல் நல்ல வழிகாட்டியாக உதவும்" என்றார்.
சரோ வேல்ராஜன் பேசும் போது, "எளிய நடையில் ஆழ்ந்த உள்ளடக்கத்தோடு வந்துள்ள இந்நூலின் மொழிநடை வாசகர்களை மிகவும் ஆர்வமுடன் வாசிக்கத் தூண்டுகிறது” என்றார். நிறைவாக ஏற்புரையாற்றிய
நூலாசிரியர் இராம.பழனியப்பன், "சரியாக திட்டமிட்டு தேவையில்லாத செலவுகளை குறைத்தால் இஎம்ஐ இல்லாத வாழ்க்கை சாத்தியம்தான். முன்பு கடன் வாங்க கூச்சப்படுவார்கள். ஆனால், இப்போது கடன் எளிதாக கிடைப்பதால் பெரும்பாலானோர் கடனாளியாகி இருக்கிறார்கள். செலவு கூடியுள்ளதா அல்லது செலவுகளை நாம் கூட்டிக் கொள்கிறோமா ? என்பதை யோசிக்க வேண்டும்.வருமானத்துக்குள் செலவு செய்து கடன் இல்லாமல் வாழ்ந்தால் செல்வத்தை பெருக்க முடியும். இந்த சிந்தனைகளை வளர்க்கும் நோக்கிலேயே இந்நூலை எழுதினேன்” என்றார்.
முன்னதாக, இந்து தமிழ் திசை தலைமை உதவி ஆசிரியர் ம.சுசித்ரா வரவேற்று. அறிமுக வுரை ஆற்றினார். பதிப்பக முது நிலை மேலாளர் எஸ்.இன்பராஜ் விருந்தினர்களை கவுரவித்தார். நிறைவாக. பதிப்பகப் பிரிவு தலைமை வடிவமைப்பாளர் மு.ராம்குமார் நன்றி கூறினார்.
புத்தகத்தை எப்படி வாங்கலாம் ?: இந்த நூலின் விலை ரூ.130. இதை store.hindutamil. in/publications என்ற இணைய பக்கத்தில் பதிவுசெய்து வாங்கலாம். அஞ்சல் மற்றும் கூரியர் மூலம் பெற 'KSL MEDIA LIMITED' என்ற பெயரில் டிடி அல்லது மணியார்டர் அல்லது காசோலையை 'இந்து தமிழ் திசை,124, வாலாஜா சாலை, சென்னை 600 002' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கூடுதல் விவரங்களு க்கு 74012 96562, 74013 29402 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT