Published : 22 Mar 2025 06:22 AM
Last Updated : 22 Mar 2025 06:22 AM
காலம், வெளி ஆகிய கருத்தாக்கம் உலகம் முழுவதும் இலக்கிய, பண்பாட்டாய்வுகளில் தொழிற்படுவதைப் பார்க்க முடிகிறது. தமிழிலும் வெளி குறித்த ஓர்மை உண்டு. அதுவே தமிழரின் முதற்பொருளாகவும் கருதப்படுகிறது. இக்கருத்தாக்கத்தைக் கோட்பாட்டு நிலையாக்கி ஆராய்தல் அவசியம். அதைத் தொடங்கி வைத்துள்ளார் காசிமாரியப்பன்.
காலச்சுவடு பதிப்பகத்தின் வாயிலாக வெளியாகியுள்ள ‘கள் மணக்கும் பக்கங்கள் – தமிழ்ச் சிந்தனை மரபில் வெளியும் காலமும்’ எனும் நூலில் இவர் முன்வைத்திருக்கும் அரசியற் பார்வை சமகால ஓர்மையுடையது. வெளி எனும் கருத்தாக்கத்தை அகம் x புறம், வைதிகவெளி x அ-வைதிகவெளி; பிராமணவெளி x சிரமணவெளி; ஆண்வெளி x பெண்வெளி; சீறூர்வெளி x பேரூர்வெளி என்றவாறு அமைத்துக்கொண்டு சிறுபான்மை வெளியில் அமர்ந்துகொள்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT