Published : 28 Dec 2024 06:13 AM
Last Updated : 28 Dec 2024 06:13 AM

கலைப் பொக்கிஷங்களின் தொகுப்பு | நம் வெளியீடு

முன்னோரால் நிர்மாணிக்கப்பட்ட கோயில்கள், சமயம் சார்ந்த வழிபாட்டுத் தலங்களாக மட்டும் இல்லாமல், தமிழகத்தின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பல நூற்றாண்டுகள் கடந்தும் எடுத்துக் காட்டும் கலைப் பொக்கிஷங்களாக உள்ளன.

கோயில்கள் சார்ந்தே சமூக மேம்பாடுகள் அனைத்தும் நடைபெற்றுள்ளன. தமிழ்நாட்டின் முகவரியாக உள்ள கோயில்களைக் காப்பதும் போற்றுவதும் நமது தலையாய கடமையாகும். பல தலைமுறைகளுக்குப் பாடம் சொல்லும்வண்ணம் கோயில்கள் அமைய வேண்டும் என்ற வகையில், அவை மன்னர்களாலும் சான்றோர் பெருமக்களாலும் நிர்மாணிக்கப்பட்டன.

தற்போது நமக்குக் கிடைத்துள்ள ஓலைச்சுவடிகள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மூலமாக, நாம் பண்டைய தமிழகம், கோட்டைகள், தமிழகக் கோயில்கள், அவற்றின் வரலாற்றுச் சிறப்புகள், கோயிலுக்குள் இயங்கிய வைத்தியசாலைகள் குறித்து அறிகிறோம். இப்புத்தகத்தின் 25 தலைப்புகளிலும் தமிழகத்தில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த புராதனமான தலங்கள், தொன்மைச் சின்னங்கள் ஆகியவை குறித்து எளிய நடையில் தொகுக்கப்பட்டுள்ளது.

பாரம்பரியம் காக்கும் திருத்தலங்கள்
முன்னூர் கோ.ரமேஷ்
இந்து தமிழ் திசை பதிப்பகம்
விலை: ரூ. 200
தொடர்புக்கு: 74012 96562

இந்து தமிழ் திசை அரங்கு எண்: 55 & 56

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x