Published : 27 Jul 2024 06:30 AM
Last Updated : 27 Jul 2024 06:30 AM

ப்ரீமியம்
நூல் வெளி | ஊரார் வனைந்த நூலகம்

காவிரி ஆற்றங்​கரையில் அமைந்​திருக்​கும் அழகிய ஊர் முசிறி. எழுத்​தாளர் ராஜம் கிருஷ்ணன் பிறந்த ஊர். ஊருக்கு வெளியே ஆற்றின் கரையில் இயங்கி வந்தது அரசு நூலகம். அந்த நூலகக்​ கட்டிடம் காலத்​தால் சிதிலமடைந்​த​போது, அதே இடத்தில் அதைப் புதுப்​பிக்​கும் முயற்​சிகளை நூலகரும் நூலகத்​ துறையும் மேற்கொண்டு வருவதை அறிந்த உள்ளூர் மக்கள், முசிறி​யில் இயங்கும் ‘களம்’ இலக்கிய அமைப்​பின் மூலம் ஒரு குறுக்கீடு செய்தார்​கள்.

ஊரின் வளர்ச்​சி​யைக் கணக்கில் கொண்டு, நூலகம்​ விரிவாக்​கப்பட வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக இருந்தது. மக்களின் விருப்​பத்​துக்கு உயிரூட்டிச் செயல் வடிவம் கொடுக்க எப்போதும் ஓர் அமைப்பு அல்லது இயக்கம்​ தேவைப்​படும். அந்த இடத்தில் தன்னார்​வமாக வந்து​நின்றது முசிறி​யின் ‘களம்’ இலக்கிய அமைப்பு. ஊராட்​சியாக இருந்த முசிறி, இன்று நகராட்சி ஆகிவிட்டது. நகராக விரிவு கொண்டுவிட்டதைக் கவனத்​தில் கொண்ட ஒரு புதிய நூலகம்​ தேவை.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x