Published : 28 Dec 2023 07:00 AM
Last Updated : 28 Dec 2023 07:00 AM

அனிமேஷன் படம்போல் எழுதப்பட்ட திருக்குறள் கதை: குழந்தைகளை கவரும் ‘குட்டிகள் குறள்' நூல் வெளியீடு

சென்னை இந்து தமிழ் திசை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற'குட்டிகள் குறள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில், ‘இந்து தமிழ் திசை ’ ஆசிரியர் கே .அசோகன், சென்னை பள்ளி மாணவர் ராஜா ஆதித்யாவுக்கு நூலின் பிரதியை வழங்கினார். உடன் நூலாசிரியர் மமதி சாரி. | படம் : எ ஸ் .சத்தியசீலன் |

சென்னை: குழந்தைகளை கவரும் வகையில் அனிமேஷன் படம் போல் எழுதப்பட்ட 'குட்டிகள் குறள்' நூல் சென் னையில் நேற்று வெளியிடப்பட்டது. குழந்தைகளைக் கவரும் வண்ணம் தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்குறள்களை கதைவடிவில் விளக்கும் வகையில் 'குட்டிகள் குறள்' என்ற நூலை எழுதியுள்ளார் பிரபல தொலைக்காட்சி தொகுப் பாளர் மமதி சாரி. இந்நூலை ‘இந்து தமிழ் திசை’ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் வெளியீட்டு நிகழ்ச்சி‘இந்து தமிழ் திசை’ அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 'குட்டிகள் குறள்' நூலை ‘இந்துதமிழ் திசை’ ஆசிரியர் கே.அசோகன் வெளியிட, முதல் பிரதியை நூலாசிரியர் மமதி சாரி பெற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து, சமூக ஆர்வலர் பத்ருனிஷா மகாதேவன், பள்ளி மாணவர் ராஜா ஆதித்யா ஆகியோர் நூலின் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.

வாசிப்பு திறனை மேம்படுத்தும்: ஆசிரியர் கே.அசோகன் பேசும்போது, ‘‘காட்சி ஊடகத் துறையால் கவரப்பட்டுள்ள குழந்தைகளை அச்சு ஊடகமும் கவரும் வகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குறளுக்கும் அமைந்துள்ள சந்தர்ப்பங்கள் அற்புதம். திருக்குறளுக்கு எத்தனையோ அறிஞர்கள் உரை எழுதியுள்ளனர். ஆனால் நூலாசிரியர் மமதி சாரி, இதுவரை யாருமே அணுகாத புதிய முறையில் திருக்குறளை அணுகியுள்ளார். குழந்தைகளின் தமிழ் வாசிப்புத் திறனை மேம்படுத்த இந்நூல் பெரிதும் உதவும்" என்று குறிப்பிட்டார்.

நூலாசிரியர் மமதி சாரி ஏற்புரையாற்றி பேசும்போது, ‘‘இந்நூல் வெளிவர மூல காரணம் தமிழறிஞர் பாத்திமா முகைதீன். இது ஒரு வித்தியாசமான நூல் என்பதை படித்து பார்த்தால் தெரியும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பினருக்கும் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் திருக்குறள் பொருந்தும். அது வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு வழிகாட்டும். திருக்குறளை அனைத்து தரப்பினரிடமும் கொண்டுசெல்ல வேண்டும்என்பதுதான் எனது ஆசை" என்றார்.

புத்தகம் எங்கு கிடைக்கும்? - 'குட்டிகள் குறள்' நூல் 104 பக்கங்களைக் கொண்டது. இதில், வான்சிறப்பு, அருளுடைமை, மக்கட்பேறு ஆகிய அதிகாரங்களில் இடம்பெற்றுள்ள குறள்கள் கதை வடிவில் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதைக்கும் உணர்வுப்பூர்வமான ஓவியங்களை நூலாசிரியரே வரைந்திருப்பது சிறப்பு. நூலின் விலை ரூ.130. இதை store.hindutamil.in/publications என்ற இணையதளத்தில் ஆன்லைனில் பதிவுசெய்து வாங்கலாம். அஞ்சல் மற்றும் கூரியர் மூலம் பெற 'KSL MEDIA LIMITED' என்ற பெயரில் டிடி அல்லது மணியார்டர் அல்லது காசோலையை ‘இந்து தமிழ் திசை, 124, வாலாஜா சாலை, சென்னை 600 002’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401296562, 7401329402 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x