Published : 30 Mar 2023 04:10 PM
Last Updated : 30 Mar 2023 04:10 PM

கிரிக்கெட் போட்டியை மைதானத்தில் பார்க்கும் அனுபவம் எப்படி இருக்கும்?

கோப்புப்படம்

கிரிக்கெட் விளையாட்டின் மீதான மோகம் அதிகம் இருக்குற நாடுகள்ல நம்ம இந்தியாவும் ஒண்ணு. அதுக்கு உதாரணமா பல்வேறு காலகட்டத்துல நடந்த சம்பவங்கள சொல்லலாம். நியூஸ் பேப்பர், ரேடியோ, டிவி, இப்போ ஸ்மார்ட்போன்னு பல தளங்கள் வழியா தங்களுக்கு பிடித்த கிரிக்கெட் விளையாட்டா ரசிகர்கள் ரசிச்சு பாப்பாங்க. இதுல சில பேருக்கு கிரிக்கெட் மேட்ச்ச நேர்ல பாத்துடணும்னு ஆசை இருக்கும். அதுக்காக பல மைல் தூரம் பயணம் செஞ்சு, மணி கணக்கா மேட்ச் டிக்கெட் வாங்க கவுன்டருக்கு வெளிய காத்திருந்து டிக்கெட் வாங்குவாங்க. இல்லன்னா ஆன்லைன் வழியா டிக்கெட் எடுப்பாங்க. இந்தியாவுல இப்போ ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்கி இருக்கு. இந்த சூழல்ல‌. அண்மையில நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சென்னை - சேப்பாக்கம் போட்டிய பாத்து இருந்தேன். அந்த அனுபவத்த இங்க ஷேர் பண்றேன்.

மேட்ச் டே அன்னைக்கு மேட்ச் தொடங்க சில மணி நேரம் முன்னவே பார்வையாளர்கள் மைதானத்துக்குள்ள அனுமதிக்கப்படுவாங்கன்னு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்திருந்தது. இது ஏன்னா பாதுகாப்பு காரணமா ஒவ்வொருத்தரையும் தனித்தனியா சோதனை போட்டு அனுப்ப வேண்டி இருக்குறதுனால. அதனால யாருக்கும் பாதிப்பு இருக்கக்கூடாதுன்னு இந்த ஏற்பாடு. நாமலும் முன்னாடியே போய் வரிசையில் நின்னு சோதனைய முடிச்சுக்கிட்டு, நம்ம ஸ்டேண்ட்குள்ள போனோம். நான் சேப்பாக்கத்துல லோயர் ஸ்டேண்ட்ல தான் மேட்ச் பாத்தேன். இந்த ஸ்டேண்ட் டிக்கெட் விலை கொஞ்சம் அதிகம்தான். ஆனாலும் பிளேயர்ஸ ரொம்ப பக்கத்துல பாக்கலாம். மைதானத்துல மேட்ச் பாக்க விரும்புறவங்க அதை முறையா அவங்கவங்க பட்ஜெட்டுக்கு ஏற்ப பிளான் செய்யலாம்.

கிரிக்கெட் போட்டிகள வெவ்வேறு மீடியம் வழியா பாக்குறதுக்கும், நேர்ல பாக்குறதுக்கும நிச்சயமா வேறு விதமான அனுபவமா இருக்கு. இங்க ரீப்ளேலாம் இருக்காது. அதனால இரைக்காக காத்து நிக்குற கொக்கு மாதிரி ரொம்ப ஷார்ப்பா ஆட்டத்தோட ஒவ்வொரு அசைவுகளையும் பாக்கணும். மைதானத்துல பெரிய திரையில் குறிப்பிட்ட ஆட்ட தருணங்கள மட்டும்தான் மீண்டும் பாக்க முடியும். அதே மாதிரி நாம டிவி வழியா மேட்ச் பாக்குறது வீடியோ எடிட்டோரோட பார்வைலதான். தனக்கு கிடைக்குற நூத்துக் கணக்கான வீடியோ பூட்டேஜ்ல சிறந்ததை தேர்வு செய்து அவர் பிராட்காஸ்ட் செய்வார். ஆனா மைதானத்துல நாம மேட்ச் பாக்குறது ஒன் அண்ட் ஒன்லி நம்ம வியூவா மட்டும் தான் இருக்கும். நிச்சயம் இது ஒரு புது அனுபவம்தான்.

அதே மாதிரி நம்ம மனம் கவர்ந்த கிரிக்கெட் வீரர்கள ரொம்ப பக்கத்துல பாக்கலாம். அது எப்படின்னா தொட்டு விடும் தூரம்தான். ஆனா தொட முடியாது. இது பவுண்டரி லைன்ல நிக்குற வீரர்களுக்கு மட்டுமே பொருந்தும். மகாதீரா படத்துல ராம்சரண், காஜல் அகர்வால் கைய பிடிக்க பார்ப்பார் இல்ல. அந்த மாதிரி ஒரு அனுபவம். இப்படி நமக்கு பக்கத்துல கோலி, வார்னர், மேக்ஸ்வெல், கில், ஜடேஜா, முகமது சிராஜ் மாதிரியான பிளேயர்ஸ் வந்தாங்க. அப்புறம் அந்த மெக்சிக்கென் வேவ், நான்-ஸ்டாப்பா சியர் பண்ற அந்த சத்தம்னு கிரவுண்ட் அட்மாஸ்பியர மைதானத்துல இருக்குற ஒவ்வொருத்தரும் பீல் செய்யலாம். ஐபிஎல் வரவுனால இந்தியன் பிளேயர்ஸ் மட்டுமில்லாம வெளிநாட்டு வீரர்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் மவுசு கூடியிருக்கு. இது தவிர உடல் முழுக்க வர்ணம பூசிக்கிட்டு, இல்லன்னா கேமரா பார்வைய தன் பக்கம் திருப்ப விரும்புற வித்தியாசமான பல விதமான கிரிக்கெட் ரசிகர்களையும் மைதானத்துல பாக்கலாம்.

மைதானத்துல உணவுக்கான விலை கொஞ்சம் கூடுதல்தான். செக்யூரிட்டி ரீசனுக்காக வாட்டர் பாட்டில் கூட அனுமதி இல்ல. ஆனா மைதானத்துல தண்ணீர் பாட்டில் விற்பனை ஜோரா நடக்குது. அதே மாதிரி எல்லா ஸ்டேண்டுலயும் குடிக்க சுத்தமான தண்ணீர் கிடைக்குது. ஆனா அதை குடிக்க டம்ளர் எதுவும் இல்ல. கழிப்பறைலாம் சுத்தமா இருக்கு.

ஸ்டேடியம் லைட்ஸ் வெளிச்சத்துல மேட்ச் பாக்குறதும் நல்ல அனுபவம்தான். மைதானத்துல ஆட்டத்த படம் பிடிக்கிற வீடியோ கேமராமேன் எல்லாம் பிசிசிஐ ஆளுங்கதான். நல்ல கிரவுன்ட் அட்மாஸ்பியர் இருக்குற ஐபிஎல் மேட்ச், அப்புறம் அதுக்கு அடுத்து நடக்க இருக்குற ஒருநாள் உலகக் கோப்பை தொடரும் இந்தியாவின் முக்கிய மைதானங்கள்ல நடக்க இருக்கு. மைதானத்துக்கு போய் மேட்ச் பாக்கணும்னு திட்டத்துல இருக்குறவங்க அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x