Published : 07 Feb 2023 03:44 PM
Last Updated : 07 Feb 2023 03:44 PM

இந்திய மயம் என்பது யாதெனில்... - ‘Chat GPT கார்னர்’ கடை படத்தை பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா

மும்பை: இன்றைய டிஜிட்டல் உலகில் செயற்கை நுண்ணறிவு சாட்-பாட்டான Chat GPT குறித்த பேச்சு படு வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்தs சூழலில் இந்தியாவில் பானிபூரி கடை ஒன்றுக்கு ‘Chat GPT கார்னர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா.

சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக செயல்பட்டு வருபவர் ஆனந்த் மஹிந்திரா. அவரது சோஷியல் மீடியா ஷேரிங் அனைத்தும் அமளி துமளி ரகங்களாக இருக்கும். கண்டுபிடிப்புகளை அடையாளம் கண்டு வாழ்த்துவது, சமயங்களில் அதனை வடிவமைத்தவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதும் அவரது வழக்கம். அதோடு நின்றுவிடாமல் கவனம் ஈர்க்கும் வகையிலான பதிவுகளையும் பகிர்வார்.

அந்த வகையில், அண்மையில் அவர் ஒரு பதிவை ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். “இது பார்க்க போட்டோஷாப் போல தெரிந்தாலும் அறிவாற்றலின் வெளிப்பாடு என்றும் இதை சொல்லலாம். எதை எப்படி இந்திய மயமாக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் எனச் சொல்லும் வகையில் இது உள்ளது” என அவர் அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார். அந்தப் பதிவில் இடம்பெற்றுள்ள படத்தின் மூலம் அது ஒரு பானிபூரி கடை எனத் தெரிகிறது. அந்தக் கடையின் பெயர் பலகையில் Chat GPT கார்னர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு இதுவரையில் 3.5 ஆயிரம் லைக்குகளை கடந்துள்ளது. 3.2 லட்சத்திற்கும் மேலானவர்கள் இந்தப் பதிவை ட்விட்டரில் பார்த்துள்ளனர்.

ChatGPT? - ChatGPT தொழில்நுட்ப சாதனங்களின் வழியே பயனர்களோடு உரையாடும் தன்மை கொண்ட சாட்பாட். இதனை ஓபன் ஏஐ எனும் ஆய்வக நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்தை கடந்த 2015 வாக்கில் எலான் மஸ்க், சாம் ஆல்ட்மேன் மற்றும் சிலர் இணைந்து தொடங்கினர். இது செயற்கை நுண்ணறிவு பெற்ற பிளாட்பார்ம். இதில் பயனர்கள் கேட்கிற கேள்விகள் அனைத்திற்கும் விடை கிடைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x