Published : 30 Jan 2023 04:15 AM
Last Updated : 30 Jan 2023 04:15 AM
உதகை: நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகா பாலகொலா ஊராட்சிக்கு உட்பட்ட பெங்கால் ஊர், கடந்த 6 ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகளால் இரு பிரிவாக இருந்து வந்தது.
இந்நிலையில் இரு பிரிவுகளையும் ஒன்றிணைக்க படுக சமுதாய முன்னோடிகளால் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, இருதரப்பும் கடந்த கால கசப்புகளை மறந்துவிட்டு, ஒன்றிணைந்து செயல்பட முடிவெடுத்தனர். அதன்படி, பெங்கால் ஊரில் உள்ள விநாயகர் கோயிலில் இருதரப்பும் ஆனந்தத்துடன் நேற்று ஒன்றிணைந்தனர்.
இந்த இணைப்பு விழா, பெங்கால் ஊரின் மாப்பிள்ளை தங்காடு மோகன் தலைமையில் நடைபெற்றது. படுக தேச பார்ட்டி நிறுவனத் தலைவரும், பாலகொலா ஊராட்சி துணைத் தலைவருமான மஞ்சை வி.மோகன் முன்னிலை வகித்தார். இதைத்தொடர்ந்து வரும் 12-ம் புதிய ஊர் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை, ஊர் பெரியவர் ராமன் தற்காலிகமாக ஒன்றிணைந்த பெங்கால் ஊரின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், பெங்கால் ஊரில் பிறந்து, திருமணமாகி பிற ஊர்களுக்கு சென்றுள்ள பெண்களை, குடும்பத்துடன் அழைத்து மாபெரும் ஒற்றுமை விழா நடத்தவும் முடிவெடுக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT