Published : 18 Jan 2023 03:02 PM
Last Updated : 18 Jan 2023 03:02 PM
வீசிங்: வீசிங்குக்கு சுண்டைக்காய் வற்றலோ, உப்பு போட்ட வற்றலோ மருந்தாக உதவும். நன்றாக வறுத்துப் பொடி செய்த வற்றலில் உப்பு இல்லாவிட்டால், உப்பைச் சேர்க்கவும். சூடான சாதத்தில் பிசைந்து 3 உருண்டை சாப்பிட்டால், வீசிங்கிற்கு மட்டுமல்ல வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நல்லது. அதேநேரம் உப்பைக் குறைவாகச் சேர்க்கவும்.
முகப் பளபளப்பு: ஆரஞ்சுத் தோலை எடுத்துக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கி நன்றாகக் காய வைக்கவும். பிறகு அதை நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வைட்டமின் சி இருப்பதால், இந்தப் பொடி தோலுக்கு மிகவும் நல்லது. இதை ரோஸ் வாட்டர் அல்லது பாலில் குழைத்து முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போட்டுக்கொண்டால், முகம் பொலிவாக இருக்கும். சருமத்தில் பூசினாலும் பளபளப்பாக இருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT