Published : 28 Oct 2022 12:47 PM
Last Updated : 28 Oct 2022 12:47 PM

பில்கேட்ஸ் உதிர்த்த 10 உத்வேக மேற்கோள்கள் | பிறந்தநாள் சிறப்புப் பகிர்வு

பில் கேட்ஸ் | கோப்புப் படம்

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தொழிலதிபரும், மைக்ரோசாப்ட் நிறுவனத்தை கட்டமைத்த முதன்மை நிறுவனருமான பில்கேட்ஸுக்கு இன்று பிறந்தநாள். வாழ்க்கை குறித்தும், வெற்றி குறித்தும் அவர் உதிர்த்த 10 உத்வேக மேற்கோள்களை இந்த பதிவில் பார்ப்போம்.

கடந்த 1995 முதல் 2017 வரையில் உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தவர். இதில் 2010 முதல் 2013 வரையில் அவர் முதலிடத்தை இழந்திருந்தார். அதனால் உலகம் முழுவதும் அறியப்படுகின்ற செல்வாக்கு மிக்க நபராக இருக்கிறார் பில்கேட்ஸ். இப்போது கூட உலக பணக்காரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளார் அவர். அவரது மொத்த சொத்து மதிப்பு 109 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

தனது சொத்துகளை அறக்கட்டளைக்கு தானமாக வழங்க திட்டமிட்டுள்ளதாக கடந்த ஜூலை வாக்கில் அவர் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை மூலம் சமூகத்திற்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் பில்கேட்ஸ்.

அவரை பலரும் ரோல் மாடலாக பின்பற்றுவதும் உண்டு. கடந்த மூன்று தசாப்தங்களில் உலகின் நம்பர் 1 பணக்காரர் என்ற அந்தஸ்தை நெடுங்காலம் கொண்டிருந்தவர்.

பில்கேட்ஸ் உதிர்த்த 10 உத்வேக மேற்கோள்கள்

* நீங்கள் ஏழையாக பிறந்தால் அது உங்களது தவறு ஏதும் இல்லை. ஆனால், நீங்கள் ஏழையாக இறந்தால், அது உங்கள் தவறு தான்.

* கடினமான வேலைகளுக்கு சோம்பேறியான ஆட்களைத் தேர்வு செய்கிறேன். ஏனெனில், அவர்களால்தான் அந்த வேலையை செய்து முடிக்க சுலபமான வழியை கண்டுபிடிக்க முடியும்.

* உலகில் உள்ள எவருடனும் உங்களை ஒப்பிட்டு பார்க்காதீர்கள்... அப்படிச் செய்தால், உங்களை நீங்களே அவமதித்துக் கொள்கிறீர்கள் என அர்த்தம்.

* பிரச்சினைகள் இருக்கும் இடத்திலேயே அதற்கான தீர்வுகளையும் தேடுகிறேன்.

* நல்ல முடிவுகள் அனுபவத்திலிருந்து பிறக்கின்றன. ஆனால் அனுபவமோ தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.

* கழிவறையை சுத்தம் செய்ய வேண்டுமானாலும் கூட அதற்கு 100% சதவீத உழைப்பை கொடுப்பேன்.

* வெற்றியைக் கொண்டாடுவது சிறப்பானது. ஆனால் தோல்வியின் படிப்பினைகளைக் கவனிப்பதும் அவசியம்.

* வறுமையில் இருப்பவர்களை என் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்கிறேன். ஒருபோதும் அவர்களின் வறுமையை அல்ல.

* வெற்றி ஒரு மோசமான ஆசிரியர். அது புத்திசாலிகளை மயக்கி தோல்வியே இல்லை என்ற எண்ணத்தை தூண்டும்.

* ஒரு செயலை சிறப்பாக செய்ய முடியாவிட்டால் குறைந்தபட்சம் அதை செய்து முடித்துவிட வேண்டும்.

அக்டோபர் 28 - பில்கேட்ஸ் பிறந்த தினம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x