Last Updated : 05 Jun, 2022 04:30 AM

 

Published : 05 Jun 2022 04:30 AM
Last Updated : 05 Jun 2022 04:30 AM

கர்நாடகாவில் ஹெலி டூரிஸம்: ஆடு மேய்க்கும் தொழிலாளர்களுக்கு ஹெலிகாப்டரில் இலவச பயணம்

பெங்களூரு

கர்நாடகாவில் ஹெலி டூரிஸத்தை மக்களிடையே பிரபலப்படுத்தும் நோக்கில், ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் 200 பேருக்கு ஹெலிகாப்டரில் இலவசமாக பயணிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

கர்நாடக சுற்றுலா துறையின் சார்பில் ஹெலி டூரிஸ‌ம் (ஹெலிகாப்டர் சுற்றுலா) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காததால் சுற்றுலா வளர்ச்சித்துறை பல்வேறு வியூகங்களை வகுத்து, அவற்றை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு கட்டமாக, மாநிலத்தில் ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் 200 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு 2 நாட்கள் இலவச ஹெலிகாப்டர் பயணத்தை ஏற்பாடு செய்தது.

அதன்படி நேற்று முன் தினம் சித்ரதுர்கா மாவட்டத்தில் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் 200 பேர், ஹெலிகாப்டரில் பறந்து ஒசதுர்கா கோயில் உள்ளிட்டவற்றை கண்டுகளித்தனர். இதையடுத்து வாணிவிலாஸ் அணையில் இலவசமாக‌ படகு சவாரி சென்று அணையின் அழகை ரசித்தனர். இதுகுறித்து ஆடு மேய்க்கும் தொழிலாளர்கள் கூறுகையில், ''ஹெலிகாப்டரில் மேலே பறந்தவாறு கீழே பார்த்தது பரசவமாக இருந்தது. தொடக்கத்தில் பயமாக இருந்த போதும் அழகை கண்ட போது பயம் மறைந்து போனது'' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x