Published : 03 Jun 2022 09:37 PM
Last Updated : 03 Jun 2022 09:37 PM

நிழல் மனிதர்களுக்காக கண்ணீர்விடும் மனசும் உங்கள் வலிமையைக் குறிக்கும் அடையாளமே!

எம்ப்பதி: தன்னைப் போல் பிறரைக் கருதுதல், பிறர் நிலையில் நின்று உணர்ந்து அணுகுதல் என்ற பொருள்படும் எம்ப்பதி (Empathy) என்பது உணர்வு முதிர்ச்சி ஆற்றலில் முதன்மையான ஒன்று. உணர்ச்சிவசப்படும்போது நீங்கள் உங்களுடைய சொந்த உணர்வுகளைக் கண்டடைந்து, அதனைச் சரி செய்யும் அதேவேளையில் மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு செயலாற்றுகிறீகள்.

உளவியலாளர் டேனியல் கோல்மன் கூற்றுப்படி, "எம்ப்பதி என்பது சுய விழிப்புணர்வு, சுயக் கட்டுப்பாடு, உந்துதல், சமூகத் திறன் போன்ற உணர்வு முதிர்ச்சியின் 5 முக்கிய குணாதிசயங்களில் ஒன்று. மிகை உணர்வு முதிர்ச்சி, சிறந்த தலைமைப் பண்பு, தொழில் வெற்றி, கல்வி சாதனை மற்றும் சிறந்த சமூக மற்றும் தனிப்பட்ட உறவுகளுடன் தொடர்புபடுத்தி காட்டப்படுகிறது. அது உடல் மற்றும் மன வலிமை மற்றும் நன்னடத்தையுடனும் தொடர்புடையது. நல்ல உணர்வு முதிர்ச்சி மன அழுத்த பிரச்சினைகளைச் சமாளிக்க உதவுகிறது.

ஒரு உணர்வுபூர்வ திரைப்படத்தைப் பார்த்து கண்ணீர் விடுவது என்பது எம்ப்பதி, சமூக விழிப்புணர்வு மற்றும் உணர்வு முதிர்ச்சியின் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்துகிறது. அதேபோல, பலவீனத்தை விட தனிப்பட்ட பலத்தினையும் உணர்த்துகிறது. வெளிப்படையாக அழுவது என்பது, ஒரு வகையான பலத்தின் குறியீடாகும். அது அந்த மனிதன் மற்றவர்களின் மீதான தனது உணர்வுகளை பயப்படாமல் வெளிப்படுத்துபவர் என்பதைக் காட்டுகிறது.

கண்ணீர் பலவீனத்தின் குறியீடில்லை: அழுவது, குறிப்பாக மற்றவர்களின் வலிக்காக அழுவது பலவீனத்தின் குறியீடாக பார்க்கப்படுவதற்கு காரணம், அது பெண்களின் குணமாக கட்டமைக்கப்படிருப்பதே ஆகும். இதில் ஆக்சிடாக்சினை இணைக்கும்போது எம்ப்பதி, சமூகப் பிணைப்புடனான அதன் உறவு, குழந்தைப் பிறப்புடன் தொடர்புபடுத்தப்பட்டு, அழுகை = பெண்கள் = பலவீனம் என கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், உங்களுடைய உணர்வு முதிர்ச்சியை வெளிப்படுத்துவது பலவீனம் இல்லை. உணர்ச்சிவசப்பட்டு அழுவது மனித இயல்புகளில் ஒன்று. நல்ல திரைப்படங்கள் நம்மை வேறு உலகத்திற்குள் நுழையச் செய்து, சக்தி வாய்ந்த உணர்வுகளை வெளிப்படுத்தி நமது மூளையில் உயிரியல் செயல்பாடுகளைத் தூண்டுகிறது.

ஒரு சினிமாவில் நிழல் மனிதர்களுக்காக திடீரென கண்ணீர் வெளிப்படுவது என்பது உங்களின் மிகையான எம்ப்பதி உணர்வின் எதிர்வினையாகும். அதனை மழுப்பி மறைக்க முயற்சிக்காமல் ஏற்றுக்கொண்டு உங்கள் உணர்வு முதிர்ச்சியை நினைத்து பெருமைப்படுங்கள். அடுத்ததாக உங்கள் நண்பர்களின் உணர்ச்சிபூர்வமான எதிர்வினைகளைத் தெரிந்துகொள்ள கண்ணீர் சிந்த வைக்கும் படங்களின் பட்டியலையும் தேடுங்கள்.

> இது, 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x